---Advertisement---

வரும் ஒருவாரத்திற்கு கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் – அச்சப்படத் தேவையில்லை! சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்!!

Published on: May 3, 2020
special officer Radhakrishnan
---Advertisement---

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 40,263 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில், சென்னையில் கோடம்பாக்கம் மண்டலத்தில் இன்று மட்டும் 60 பேருக்கு, திருவிக நகர் மண்டலத்தில் மேலும் 34 பேருக்கு, கொரானா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையை மையமாகக் கொண்டு கொரோனா தொற்று பரவியவர்களின் எண்ணிக்கை 146ஆக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து, இன்று கொரோனா தடுப்புப்பணி சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களின் சந்திப்பின் போது கொரொனா தொடர்பான நடவடிக்கைகளையும், சிறப்பு தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.

அதன்படி,

>>தன்னார்வலர்கள் அனைவரும் தாமாக முன்வந்து 10 நாட்களுக்கு ஒருமுறை டெஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்: நமக்கு கொரோனா வராது என அலட்சியத்துடன் யாரும் இருக்கக்கூடாது

>>மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும்; மாஸ்க் இல்லையெனில் துணியை முகக்கவசம் போல் பயன்படுத்தலாம்

>>பேசும்போது சிலர் முகக்கவசத்தை கழற்றியபடி பேசுகின்றனர்; அது தவறு. அதிகாரிகள் உட்பட யாராக இருந்தாலும் பேசும்போது கூட முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்

>>சென்னையில் நோய் கட்டுப்பாடுப் பகுதிகளில் 25% பேர் முகக்கவசம் அணிவதில்லை. திரு.வி.க.நகர், ராயபுரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்கள் சவாலான பகுதிகளாக உள்ளன

>>வரும் ஒருவாரத்திற்கு கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் – அச்சப்படத் தேவையில்லை

>>கடைகளில் பணியாற்றுபவர்களுக்கும், வீடுகளுக்கு பொருட்கள் டெலிவரி செய்பவர்களுக்கும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த ஏற்பாடு

>>கோயம்பேடு சந்தை தொழிலாளர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்

>>அதிதீவிரமாக அதிக எண்ணிக்கையில் சோதனைகளை நடத்த திட்டம். அதிக சோதனைகளால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் – அச்சப்படத் தேவை இல்லை

என கொரோனா தடுப்புப்பணி சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல் அளித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring Dhanush and Sivakarthikeyan.

கமர்ஷியல் பாதைக்குத் திரும்பும் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன்: அடுத்தடுத்து வெளியாகும் மாஸ் படங்கள்!

Editorial visual featuring director Mysskin's remarks on Dorothy.

சினிமா கிளிஷேக்களை உடைத்தெறிந்த ரிஷிகாந்த் மற்றும் சனந்த்: ‘டோரதி’ படத்திற்கு இயக்குநர் மிஷ்கின் பாராட்டு மழை!

Editorial visual featuring director Ajay Gnanamuthu and plans for his cinematic universe.

10 பாகங்களாக வெளியாகும் டெமோன்டி காலனி: நயன்தாராவுடன் இணையும் இயக்குநர் அஜய் ஞானமுத்து!

Editorial visual featuring Superstar Rajinikanth's Jailer 2.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ படத்தின் இறுதி ரன்டைம் விவரம் வெளியீடு: எத்தனை மணி நேரம் தெரியுமா?

Theatrical release announcement graphic for Haiku.

இயக்குநர் யுவராஜ் சின்னசாமியின் ‘ஹைக்கூ’ திரையரங்கு வெளியீட்டு தேதி அறிவிப்பு

Editorial visual featuring director Mysskin discussing his delayed projects.

பிசாசு 2 மற்றும் ட்ரெயின் படம் குறித்து மனம் திறந்த இயக்குநர் மிஷ்கின்: வைரலாகும் யானை கனவுத் தகவல்!