---Advertisement---

‘தனி ஒருவன் 2’ படம் தாமதமாவது ஏன்? தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட அதிரடித் தகவல்!

By Sri
Published on: August 8, 2026
Producer Archana Kalpathi explaining the status of Thani Oruvan 2.
---Advertisement---

தமிழ் திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்றான ‘தனி ஒருவன் 2′ (Thani Oruvan 2) திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் (AGS Entertainment) தயாரிப்பில், இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில், நடிகர் ரவி மோகன் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாக உள்ள இப்படத்தின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி (Archana Kalpathi) தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “தனி ஒருவன் 2’ என்பது மிகச் பெரிய பொருட்செலவில் உருவாகும் பிரம்மாண்டமான படம். தற்போதைய சினிமா சந்தை நிலவரம் மற்றும் வணிகச் சூழல் மேம்பட்டால் மட்டுமே இப்படியான பெரிய பட்ஜெட் படங்களைத் தொடங்க முடியும் என்பதால் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், ரவி மோகன், இயக்குநர் மோகன் ராஜா மற்றும் நயன்தாரா உள்ளிட்ட முக்கியக் கலைஞர்கள் அனைவரும் தற்போதைய ஒப்பந்தமான படங்களில் பிசியாக இருப்பதால், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இன்னும் சிறிது காலம் ஆகும்” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official announcement poster for the second single 'OneSunOneMoon' from Jailer 2.

ஜெயிலர் 2 படத்தின் 2வது சிங்கிள் ‘ஒன் சன் ஒன் மூன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: அனிருத் இசையில் செப்டம்பர் 25-ல் வெளியீடு!

'ஓம்' திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை வடிவம்.

ரஜினி மற்றும் சூர்யா படங்களுக்காக ‘ஓம்’ ரிலீஸை ஒத்திவைத்தார் தனுஷ்: அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியீடு!

Official theatrical release poster for Vishnu Vishal and Mamitha Baiju's movie Irandu Vaanam.

விஷ்ணு விஷால் – மமிதா பைஜு ஜோடியின் ‘இரண்டு வானம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! அக்டோபர் 23-ல் உலகமெங்கும் வெளியீடு!

News visual highlighting the casting fraud complaint and police investigation regarding the movie Dharman.

ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு என்ற பெயரில் மோசடி: கமல் தரப்பு காவல் ஆணையரகத்தில் புகார்!

Visual representation of David Warner's viral AI dance video for the Jailer 2 song 'Ala Polelo'.

ஜெயிலர் 2 ‘அலா பொலேலோ’ பாடலுக்கு நடனமாடும் டேவிட் வார்னர்: ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வைரல் வீடியோ!

Visual representation of director Ashwath Marimuthu revealing casting trivia for the movie Dragon.

‘டிராகன்’ பட வாய்ப்பை நழுவவிட்ட பிரீத்தி முகுந்தன்: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்ட சுவாரஸ்யத் தகவல்!