---Advertisement---

மது பிரியர்களுக்கு என்னவோ கொண்டாட்டம் தான்! ஆனா மத்தவங்களுக்கு தான் திண்டாட்டம்!!

Published on: May 18, 2020
TASMAC 2hour extended
---Advertisement---

தமிழகத்தில் கொரொனாவால், அனைத்து அத்தியாவாசியற்ற கடைகளும் முடக்கப்பட்டாலும், டாஸ்மாக் மட்டுமாது திறக்கக்கோரி மது பிரியர்கள் பலர் ஊடங்கள் முலம் வேண்டுகோள்விடுத்து வந்தனர்.

இதனையடுத்து, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் கடந்த 7ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில், மது பிரியர்கள் அதிக அளவில் கூட வாய்ப்புள்ளதால், சென்னை உயர்நீதிமன்ற டாஸ்மாக் கடைகளை முட உத்தரவு பிறப்பித்தது. அதன்பின் தமிழக அரசு உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுயிட்டது. அந்த மேல்முறையீட்டின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை இல்லை என உத்தரவை பிறப்பித்ததை அடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் கடந்த சனிக்கிழமை முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்ப்பட்டு வந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை இரண்டு மணி நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விற்பனை என இருந்த நிலையில், இரவு 7 மணி வரை மதுவிற்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் சமூக ஆர்வலர்கள் பலர், ஏற்கனவே டாஸ்மாக் கடைகளில் கூடும் மதுபிரியர்கள் தனிமனித இடைவெளி கடைப்பிடிப்பதில்லை, இதில் வேறு மேலும் இரண்டு மணி நேரம் மது விற்பனை நீட்டிப்பு என்ற அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாகவும், இதனால் மது பிரியர்களுக்கு என்னவோ கொண்டாட்டம் தான்! ஆனா மத்தவங்களுக்கு தான் திண்டாட்டம்!! என்று புலம்பி வருகின்றனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring Dhanush and Sivakarthikeyan.

கமர்ஷியல் பாதைக்குத் திரும்பும் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன்: அடுத்தடுத்து வெளியாகும் மாஸ் படங்கள்!

Editorial visual featuring director Mysskin's remarks on Dorothy.

சினிமா கிளிஷேக்களை உடைத்தெறிந்த ரிஷிகாந்த் மற்றும் சனந்த்: ‘டோரதி’ படத்திற்கு இயக்குநர் மிஷ்கின் பாராட்டு மழை!

Editorial visual featuring director Ajay Gnanamuthu and plans for his cinematic universe.

10 பாகங்களாக வெளியாகும் டெமோன்டி காலனி: நயன்தாராவுடன் இணையும் இயக்குநர் அஜய் ஞானமுத்து!

Editorial visual featuring Superstar Rajinikanth's Jailer 2.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ படத்தின் இறுதி ரன்டைம் விவரம் வெளியீடு: எத்தனை மணி நேரம் தெரியுமா?

Theatrical release announcement graphic for Haiku.

இயக்குநர் யுவராஜ் சின்னசாமியின் ‘ஹைக்கூ’ திரையரங்கு வெளியீட்டு தேதி அறிவிப்பு

Editorial visual featuring director Mysskin discussing his delayed projects.

பிசாசு 2 மற்றும் ட்ரெயின் படம் குறித்து மனம் திறந்த இயக்குநர் மிஷ்கின்: வைரலாகும் யானை கனவுத் தகவல்!