---Advertisement---

திமுக அதிமுக கவிஞர் வைரமுத்துவை ஒப்பிட்டு தினகரன் பேச்சு

Published on: March 29, 2021
---Advertisement---

சில அரசியல் கட்சிகளின் பேச்சில் ஆயிரம் குழப்பங்கள் ஓட்டைகள் இருந்தாலும் சில அரசியல்வாதிகளின் பேச்சுக்கள் நம்மை ரசிக்க வைக்கும் இயல்பான பேச்சாய் இருக்கும்.

முன்பு டிடிவி அணியில் இருந்து இப்போது விலகி திமுகவில் இருக்கும் முன்னாள் அமைச்சர் தங்க தமிழ்செல்வன், அமமுக தலைவர் டிடிவி தினகரன் போன்றோரை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

இவர்களது பேச்சுக்கள் எப்போதும் சுவாரஸ்யமாகவும் எந்த வித செயற்கையும் இன்றி இயற்கையாக இருக்கும் என்பதை இவரது பேச்சுக்களில் கவனிக்க முடியும்.

இன்று தேனியில் பேசிய தினகரன், அதிமுக ஏற்கனவே கஜானாவை காலி செய்து வச்சிருக்கு, திமுக வந்ததுன்னா அதை விட மோசமாயிடும் அதனால் கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதை போல நான் பட்டுவேட்டிக்கு கனவு கண்டு கொண்டிருந்தேன் நான் கட்டி இருந்த கோவணம் அவிழ்க்கப்பட்டது என வைரமுத்துவின் கவிதை போல் ஆகிவிடும் உங்கள் வாழ்க்கை என நகைச்சுவையாக பேசினார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.