---Advertisement---

வயநாடு நிலச்சரிவு… 2-வது நாளாக தொடரும் மீட்பு பணி… பலி எண்ணிக்கை 168 ஆக உயர்வு…!

By Sri
Published on: July 31, 2024
---Advertisement---

கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகாலை இரண்டு மணி அளவில் திடீரென ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 168 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.  வயநாட்டு நிலச்சரிவுவில் சிக்கி உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்திருக்கின்றது.

500 பேரின் கேதி என்ன ஆனது என்பது தற்போது வரை தெரியாத நிலையில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மீட்பு பணிகள் இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.  மேலும் வயநாட்டில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. தொடர்ந்து காணாமல் போன 500 பேரை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. மேலும் இதில் உயிர் தப்பிய மக்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  75-Year-Old Sand Road in Tamil Nadu Defies Time and Trends

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.