---Advertisement---

தக்காளி விலை உயர்வு… பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் அரசு விற்பனை…!

By Sri
Published on: October 9, 2024
---Advertisement---

தக்காளி விலை உயர்வை முன்னிட்டு பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

தக்காளி விலை தற்போது கிடுகிடுவென்று உயர்ந்திருக்கின்றது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த மாதம் இறுதியில் ஒரு கிலோ தக்காளி 25 முதல் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக 50 முதல் 70 ரூபாய் வரை அதிகரித்து விற்பனையாகி வருகின்றது. அதிலும் இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 60 முதல் 90 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது.

மொத்த மார்க்கெட்டில் இந்த விலை வெளிச்சந்தையில் மற்றும் சில்லறை கடைகளில் 70 முதல் 100 வரை விற்பனையாகி வருகின்றது. அதேபோல் வெங்காயம் விலையும் கிடுகிடுவென்று உயர்ந்திருக்கின்றது. ஆந்திரா மற்றும் கர்நாடகா பகுதிகளில் அதிக மழை காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றது.

இதனால் தமிழகத்திற்கு வரும் தக்காளிகளின் வரத்து குறைவாக இருக்கின்றது. வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் உயர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கூறியிருக்கிறார்கள். வெங்காயம், தக்காளி விலை உயர்ந்திருப்பதால் அவற்றை மகாராஷ்டிராவில் இருந்து இறக்குமதி செய்து பண்ணை பசுமை கடைகளில் தமிழக அரசு விற்பனை செய்து வருகின்றது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  அரசு முட்டைகள் விற்பனை... ஓட்டலுக்கு சீல்... அதிரடி நடவடிக்கை...!

அதன்படி கடைகளில் வெங்காயம் கிலோ 55 வரை விற்பனையாகி வருவதால் பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம் கிலோ 40 ரூபாய்க்கு விற்பனையாகின்றது. தக்காளி விலை வெளிச்சந்தையில் 70 ரூபாய் முதல் 100 ரூபாய்க்கு விற்பனையாகி வரும் நிலையில் தக்காளி கிலோ 60க்கு விற்பனையாகி வருகிறது. அதன் படி அதிகபட்சம் ஒருவருக்கு 2 கிலோ தக்காளி மட்டுமே வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actress Mrunal Thakur.

கடந்த 9 மாதங்களாக புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகாத நடிகை மிருணாள் தாக்கூர்: காரணம் என்ன?

Editorial visual featuring industry discussions on Malayalam actor remuneration.

மலையாள நடிகரின் 3 மடங்கு சம்பள டிமாண்ட்: தெலுங்கு பட வாய்ப்பால் கோலிவுட்டில் தீயாய் பரவும் கிசுகிசு!

Editorial visual featuring the Netflix streaming milestone for Mandaadi.

நெட்ஃபிளிக்சில் கலக்கும் சூரி – சுஹாஸின் ‘மண்டாடி’: முதல் வாரத்தில் 2.2 மில்லியன் வியூஸ் கடந்து சாதனை!

Editorial visual featuring Nani and director Prem Kumar's new movie project.

நானி – ’96’ பிரேம் குமார் கூட்டணியில் உருக்கம் நிறைந்த காதல் கதை: ஹீரோயினாக ருக்மிணி வசந்த்?

Editorial visual featuring the shoot wrap of Dayangaram.

ஷூட்டிங் முடிந்த கையோடு வெளியாகும் விஜே சித்துவின் ‘டயங்கரம்’: டிசம்பரில் தியேட்டர் ரிலீஸ்!

Editorial visual featuring the censor delay for Karathey Babu.

அரசியலை அதிரவைக்கும் ‘கராத்தே பாபு’: சென்சார் போர்டு கெடுபிடியால் 2027-க்கு தள்ளிப்போகும் ரிலீஸ்?