கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசு புதிய முயற்சியாக தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள் நேரடியாக உதவி செய்ய கட்டுப்பாடு விதித்திருந்தது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் கட்டுப்பாடு என தமிழக அரசு விளக்கம் அளித்துயிருந்தது.
அதில், தன்னார்வலர்கள் தனியாக மக்களுக்கு பொருட்கள் வழங்க தடை விதித்துள்ளதாகவும், சமைத்த உணவுகள், நிவாரண பொருட்கள் இவற்றை வழங்கி வருவதால் தனிமனித இடைவெளி பாதிப்புக்குள்ளாகும் என்றும் இத்தகையான செயல்கள் அரசின் ஊரடங்கை மீறியதாக கருதி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு செய்தி வெளியீட்டில் அறிவித்துயிருந்தது. இதை தொடர்ந்து, தன்னார்வலர்கள் நிதியாக இருந்தால் முதல்வரின் நிவாரண நிதிக்கும், பொருளாக இருந்தால் மாநகர ஆணையரிடம் தரலாம் என்று தமிழக அரசு வலியுறுத்திருந்தது.
இதை அடுத்து, திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கொரோனா பாதிப்பு தொடர்பாக நிபந்தனையுடன் கூடிய அனுமதி அளித்துள்ளது. அதில்,
1. நிவாரண உதவிகள் வழங்க 3 பேர் மட்டுமே செல்ல அனுமதி
2. நிவாரண உதவிகள் வழங்குவதற்கு முன்பு, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும்
3. அதுவும், 48 மணி நேரத்திற்கு முன்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும்
மேலும், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் நிவாரண உதவிகள் வழங்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.







