---Advertisement---

Joju George’s Paripadi : “ஜோஜு ஜார்ஜ் – யுவன் சங்கர் ராஜா கூட்டணி” – மிரட்டலான அறிவிப்புடன் வெளியான ‘பரிபாடி’; மலையாளத்தில் தடம் பதிக்கும் யுவன்!

By Sri
Published on: April 17, 2026
Actor and Director Joju George at the pooja ceremony of his second directorial Paripadi with music by Yuvan Shankar Raja.
---Advertisement---

மலையாளத் திரையுலகில் தனது நடிப்பால் மட்டுமல்லாமல், முதல் படமான ‘பனி’ (Pani) மூலமாக இயக்குனராகவும் முத்திரை பதித்தவர் ஜோஜு ஜார்ஜ் (Joju George). ‘பனி’ திரைப்படம் கேரளா மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த நிலையில், ஜோஜு ஜார்ஜ் தனது இரண்டாவது இயக்கமான ‘பரிபாடி’ (Paripadi) படத்தின் அறிவிப்பை இன்று ஏப்ரல் 17, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

இந்தப் படத்தின் மிகப்பெரிய ஹைலைட்டே இதன் தொழில்நுட்பக் கலைஞர்கள் தான். தென்னிந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja), ‘பரிபாடி’ படத்தின் மூலம் நேரடி மலையாளத் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். யுவனின் பிஜிஎம் (BGM) மற்றும் ஜோஜுவின் மேக்கிங் இரண்டும் சேரும்போது படம் வேற லெவலில் இருக்கும் என்று ரசிகர்கள் இப்போதே எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

“இயக்குனர் ஜோஜு ஜார்ஜ் – இசையமைப்பாளர் யுவன்” என ஒரு மெகா கூட்டணி இப்போ மலையாளத்துல தயாராகியிருக்கு.

வேணு குன்னப்பள்ளி (Venu Kunnappilly) தனது காவ்யா ஃபிலிம் கம்பெனி சார்பாக இந்தப் படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி (Rajeev Ravi) மற்றும் தேசிய விருது வென்ற ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் (Anbariv) ஆகியோர் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் பூஜை இன்று சாலக்குடியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. சுமார் 100 புதுமுக நடிகர்கள் இந்தப் படத்திற்காக கடந்த 3 மாதங்களாகப் பயிற்சி எடுத்துள்ளனர்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Aishwarya Rajinikanth Next: "குழந்தைகள் படம் டூ மெகா பட்ஜெட் மூவி!" ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 'டெக்ஸ்லா'.. களமிறங்கும் அபிஷேக் பச்சன்!

மலையாளத்தில் இருந்து வந்துள்ள இந்த ‘பரிபாடி’ அப்டேட் சினிமா வட்டாரத்தில் ஒரு பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஜோஜு ஜார்ஜ் இந்தப் படத்தில் இயக்குவதுடன் கதையை எழுதி ஹீரோவாகவும் நடிக்கிறார். இயக்குனராக பிஸியாக இருந்தாலும், நடிகராக ஜோஜுவின் ‘வரவு’ (Varavu) மே 1-ம் தேதியும், ‘அஜ சுந்தரி’ (Aja: Sundari) ஜூன் 19-ம் தேதியும் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actress Mrunal Thakur.

கடந்த 9 மாதங்களாக புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகாத நடிகை மிருணாள் தாக்கூர்: காரணம் என்ன?

Editorial visual featuring industry discussions on Malayalam actor remuneration.

மலையாள நடிகரின் 3 மடங்கு சம்பள டிமாண்ட்: தெலுங்கு பட வாய்ப்பால் கோலிவுட்டில் தீயாய் பரவும் கிசுகிசு!

Editorial visual featuring the Netflix streaming milestone for Mandaadi.

நெட்ஃபிளிக்சில் கலக்கும் சூரி – சுஹாஸின் ‘மண்டாடி’: முதல் வாரத்தில் 2.2 மில்லியன் வியூஸ் கடந்து சாதனை!

Editorial visual featuring Nani and director Prem Kumar's new movie project.

நானி – ’96’ பிரேம் குமார் கூட்டணியில் உருக்கம் நிறைந்த காதல் கதை: ஹீரோயினாக ருக்மிணி வசந்த்?

Editorial visual featuring the shoot wrap of Dayangaram.

ஷூட்டிங் முடிந்த கையோடு வெளியாகும் விஜே சித்துவின் ‘டயங்கரம்’: டிசம்பரில் தியேட்டர் ரிலீஸ்!

Editorial visual featuring the censor delay for Karathey Babu.

அரசியலை அதிரவைக்கும் ‘கராத்தே பாபு’: சென்சார் போர்டு கெடுபிடியால் 2027-க்கு தள்ளிப்போகும் ரிலீஸ்?