---Advertisement---

எலக்ட்ரிக் பில் கட்ட மேலும் அவகாசம்! கடைசி தேதி எப்போது தெரியுமா?

By Sri
Published on: April 14, 2020
---Advertisement---

தமிழகத்தில் மின் கட்டணம் கட்டுவதற்கான கடைசி தேதி மே 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அனைத்துத் தொழில்களும் முடங்கியுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் இந்த மாதம் கட்ட வேண்டிய மின் கட்டண விவரங்களும் குறிக்கப்படவில்லை. அதனால் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், கடந்த மாதம் கட்டிய தொகையையே இந்த மாதமும் கட்டிக்கொள்ளலாம் என அறிவித்து அதற்கான அவகாசத்தையும் வழங்கி இருந்தது.

இதுகுறித்து மேலும் மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவிட்‌-19 பரவுதலால்‌ 24.03.2020 நள்ளிரவு முதல்‌ ஊரடங்கு அமல்படுத்தியதன்‌ காரணமாக, தாழ்வழுத்த மின்நுகர்வோர்களின்‌ இடர்பாடுகளை கருத்தில்‌ கொண்டு, தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மான கழக தாழ்வழுத்த மின்‌ பயனீட்டாளர்களின்‌ மின்னிணைப்புகளுக்கு மின்‌ கட்டணம்‌ மற்றும்‌ இதர நிலுவை தொகை செலுத்துவதற்கான கெடு நாள்‌ 25.03.2020 முதல்‌ 14.04.2020 வரை இருக்குமாயின்‌, அதற்கான தாமதக்‌ கட்டணம்‌ மற்றும்‌ மின்‌ துண்டிப்பு/மறு இணைப்புக்‌ கட்டணமின்றி 14.04.2020 வரை கட்டணம்‌ செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது.

தற்பொழுது தமிழ்நாடு அரசு 30.04.2020 வரையிலான காலத்திற்கு ஊரடங்கு உத்தரவினை நீட்டிப்பு செய்ததற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதனைத்‌ தொடர்ந்து 30.04.2020-க்கு பிறகு மின்கட்டணம்‌ செலுத்த வரும்‌ தாழ்வழுத்த மின்நுகர்வோர்களின்‌ இடர்பாடுகளை கருத்தில்‌ கொண்டு, தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மான கழகத்தின் அறிவிப்புகள்‌ கீழ்வருமாறு:

இதையும் படிக்க தவறாதீர்கள்:  கொரோனா நிவாரணம்! தேமுதிக 5 கோடி அறிவிப்பு!

அ. தாழ்வழுத்த மின்நுகர்வோர்களின்‌ மின்கட்டணம்‌ மற்றும்‌ இதர நிலுவை தொகை செலுத்துவதற்கான கெடு நாள்‌ 25.03.2020 முதல்‌ 30.04.2020 வரை இருக்குமாயின்‌, அத்தொகையினை செலுத்த 06.05.2020 வரை காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.

ஆ. மார்ச்‌ 2020 மற்றும்‌ ஏப்ரல்‌ 2020 ஆகிய மாதங்களில்‌ 22.03.2020 முதல்‌ 30.04.2020 வரை மின்கட்டணம்‌ செலுத்த வேண்டிய தாழ்வழுத்த மின்நுகர்வோர்கள்‌ அதற்கு முந்தைய மாத கணக்கீட்டு பட்டியல்படி மின்கட்டணம்‌ செலுத்தலாம்‌. இவ்வாறு செலுத்திய மின்கட்டணம்‌ பின்வரும்‌ மாத கணக்கீட்டு மின்கட்டணத்தில்‌ சரிகட்டல்‌ செய்யப்படும்‌ என தெரிவிக்கப்படுகிறது (அதாவது ஜனவரி 2020/பிப்ரவரி 2020/மார்ச்‌ 2020 ஆகிய மாதங்களில்‌ செலுத்திய தொகையையே மார்ச்‌ 2020/ஏப்ரல்‌ 2020 மின்கட்டணமாக செலுத்தலாம்‌).

இ) மேலும்‌, ஏற்கனவே பயனீட்டாளர்களுக்கு வழங்கியுள்ள இணையதளவழி மூலம்‌ வலைதள வங்கியியல்‌, கைபேசி வங்கியியல்‌, பேமண்ட்‌ கேட்வே, பிபிபிஎஸ்‌ (8875) முதலிய வழிகள்‌ மூலம்‌ பணம்‌ செலுத்தி மின்கட்டண கவுண்டர்களுக்கு வருவதை தவிர்த்து முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு தாழ்வழுத்த மின்பயனீட்டாளர்களை தமிழ்நாடு மின்‌உற்பத்தி மற்றும்‌ பகிர்மானக்‌ கழகம்‌ கேட்டுக்‌ கொள்கிறது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு அவர்களின் நினைவாஞ்சலிப் படம்.

தமிழர் சமையலின் இமயம் சாய்ந்தது: பத்மஸ்ரீ செஃப் தாமு திடீர் மறைவு – கண்ணீரில் ரசிகர்கள்!

Editorial visual featuring television actor Irfan's career interview.

“மிஸ்ஸான அஜித் படம்… அங்காடி தெருவும் கைநழுவியது!” சீரியல் நடிகர் இர்பான் பகிர்ந்த நெகிழ்ச்சி சினிமா கதை!

Editorial visual featuring the production update and casting change for Daredevil.

‘டேர்டெவில்’ படப்பிடிப்பு நவம்பரில் தொடக்கம்: ஸ்ரீலீலாவுக்குப் பதிலாக களமிறங்கும் கயாடு லோஹர்!

Editorial visual featuring the first look poster of the film Milo.

முகின் ராவ் நடிக்கும் ‘மைலோ’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்: எதிர்பார்ப்பை அதிகரிக்கும் புதிய சினிமா அப்டேட்!

rkfi-seyon-dharman-slate-updates

ராஜ் கமல் ஃபில்ம்ஸ்-யின் அடுத்தடுத்த பிரம்மாண்டங்கள்: சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ மற்றும் ரஜினியின் ‘தர்மன்’ அப்டேட்டுகள்!

Editorial visual featuring the Diwali release announcement for Mookuthi Amman 2.

‘மூக்குத்தி அம்மன் 2’ தீபாவளி ரிலீஸ் தேதி அறிவிப்பு: சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் மாஸ் ஆன்மீகப் படம்!