---Advertisement---

கொரோனா நிவாரணம்! தேமுதிக 5 கோடி அறிவிப்பு!

By Sri
Published on: April 14, 2020
---Advertisement---

கொரோனா நிவாரணமாக தேமுதிக சார்பில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மே 5 ஆம் தேதிக்குப் பின்னர் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1173 ஆக உள்ளது. இதனால் முதலில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மேலும் 20 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தனிநபர்களும், அரசாங்கமும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தின் முக்கியக் கட்சிகளில் ஒன்றான தேமுதிக 5 கோடி ரூபாய் மதிப்பிலானப் பொருட்களை நிவாரணமாக அளிக்க முடிவு செய்துள்ளது. இது சம்மந்தமாக சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேமுதிக சார்பில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் மே 3ம் தேதிக்கு பிறகு வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரடங்கு,  சமூக இடைவேளி,  இவையெல்லாம் நீங்கிய பிறகு தேமுதிக சார்பில்  மாவட்ட வாரியாக நகரம், ஒன்றியம், பேரூர் கழகம், ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள்,  மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை நேரடியாக செய்ய வேண்டும்.

உண்ண உணவு, இருக்க இருப்பிடம், உடுத்த உடை, மருத்துவம், வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் சிக்கி உள்ளவர்களுக்கு பண உதவி போன்றவற்றை யாருக்கு என்ன தேவையிருக்கிறது என்பதை குறிப்பு அறிந்து, மக்களுக்கு நேரடியாக சென்றடைய நாம் தாயராக இருப்போம். கொரோனா ஊரடங்கு விலகிய பிறகு மே3ம் தேதிக்கு பின்னர்  கழக நிர்வாகிகள் ஒவ்வொரும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க  தயாராக இருங்கள் என கேட்டு கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Nayanthara and Trisha in consideration as heroine for Karthi and Mohan Raja's movie.

கார்த்தி ஜோடியாக நயன்தாரா அல்லது த்ரிஷா? மோகன் ராஜா படத்தின் ஹீரோயின் ரேஸில் யார் முன்னணி?

Director Sreenu Vaitla talking about missing the chance to direct Ajith Kumar.

நடிகர் அஜித்துடனான அந்த பொன்னான வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன்: பிரபல தெலுங்கு இயக்குநர் வருத்தம்!

Actress Mrunal Thakur and cricketer Yashasvi Jaiswal sparking viral dating rumours.

பிரபல நடிகை மிருணாள் தாக்கூர் மற்றும் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டேட்டிங் ரகசியம்? இணையத்தில் தீயாய் பரவும் வைரல் வீடியோ!

Movies and web series releasing on OTT platforms this week.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் முழு லிஸ்ட்!

Singer Kenesha Francis makes a social media comeback.

சர்ச்சைகளுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் கம்பேக் கொடுத்தார் கெனிஷா: ‘ஓடி ஓடி’ பாடலைத் தயார் செய்த அறிவிப்பு!

Vijay Sethupathi reveals the first look poster of Makkal Kaavalan.

மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!