சென்னையில் கோடிக்கணக்கான பணத்தை மர்ம நபர் ஒருவர் வீசிச்சென்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோட்டூர்புரம் பகுதியில் நேற்று இரவு அந்த பகுதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் ஒருவர் அந்த பகுதியில் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தார். அவர் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணை செய்ய அவரை தடுத்து நிறுத்தினர்.
ஆனால், அவர் நிற்காமல் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை ஜிப்பில் துரத்தியுள்ளர். அப்போது, அந்த வாலிபர் தான் வைத்திருந்த 3 பைகளையும் தூக்கி வீசிவிட்டு சென்றார். எனவே, போலீசார் ஜீப்பை நிறுத்தி அந்த பைகளை சோதனை செய்தனர். அப்போது அதில், ரூ.1.56 கோடி கட்டுகட்டாக பணம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த பணத்தை கோட்டூர்புர காவல் நிலையத்தில் வைத்திருக்கும் போலீசார், அந்த மர்ம நபரை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.