வார சம்பளம்.. இன்சண்டிவ்… சென்னையை கலக்கிய செல்போன் திருட்டு கும்பல்..

149
cellphone

சென்னையில் தொடர்ந்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த சில வருடங்களாக சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நூதன முறையில் செல்போன்களை திருடி வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கும்பலுக்கு ஆந்திராவை சேர்ந்த ரவி என்பவன் தலைவனாக செயல்பட்டுள்ளான்.

அவன் ஆந்திராவில் இருந்து வாலிபர்களை அழைத்து வந்து பொது இடங்களில் எப்படி செல்போன் திருடுவது என பயிற்சி அளித்துள்ளான். பேருந்து நிறுத்தத்தில், பேருந்தில், ரயில் நிலையம் என மக்கள் கூடும் இடங்களில் அவர்கள் தினமும் செல்போன்களை திருடியுள்ளனர். ஒரு நாளைக்கு குறைந்தது 3 செல்போன்களை திருட வேண்டும். அப்படி செய்தால் வாரத்திற்கு ரூ.5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை சம்பளமாக கொடுத்துள்ளார். அதிகமாக திருடு வருபவருக்கு இன்சண்டிவ் தொகையும் கொடுத்துள்ளார்.

ஓவ்வொரு வாரம் ஆந்திரா ராஜமுந்திரிக்கு சென்று திருடிய செல்போன்களை ரவி விற்றுள்ளார். அதன்பின் குடும்பத்தினருடன் இருந்துவிட்டு திங்கள் கிழமை வந்து திருட்டு தொழிலை கவனித்துள்ளார். அந்த வீட்டில் 10க்கும் மேற்பட்ட வாலிபர்களை வைத்து செல்போன திருடும் தொழிலை அவர் செய்து வந்துள்ளார். அவர்கள் அனைவரையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

பாருங்க:  5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு! எதற்கெல்லாம் விலக்கு?