இன்று முருகனுக்குரிய பங்குனி உத்திர திருநாள். ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் வரும் உத்திர நட்சத்திரத்தன்று பங்குனி உத்திர திருநாள் கொண்டாடப்படுகிறது.
பங்குனி உத்திரத்தன்றுதான் தெய்வீக திருமணங்கள் அதிகம் நடந்ததாம். முருகன் தெய்வானையை மணம் முடித்தது இந்த நாளில் தான் என புராணங்கள் கூறுகின்றன.
பங்குனி உத்திரம் என்பது பௌர்ணமியும் உத்திரம் நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளாகும். மற்ற மாதங்களில் வரும் பௌர்ணமியைக் காட்டிலும் பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் இணையும் போது தோன்றும் பௌர்ணமி நிலவு மிகப்பெரியதாகவும் மிகப்பிரகாசமாகவும் தோன்றும்.
இன்று பங்குனி மாத உற்சவம் முருகன் கோவில்களில் மட்டுமல்ல மற்ற ஆலயங்களிலும் நடைபெறுகிறது.
பெருமாள் கோவில்களிலும் பங்குனி மாத உற்சவங்கள் உத்திர நட்சத்திரத்தன்று நடக்கிறது.
சபரி சாஸ்தா ஐயப்பனின் பிறந்த நாளாகவும் பங்குனி உத்திரம் திருநா கொண்டாடப்படுகிறது.
இப்படி பங்குனி உத்திரத்துக்கென்று பல்வேறு சிறப்புகள் உள்ளன.