Latest News
பெரும் தொல்லையை கொடுத்த பாலாறு பாலம் பணிகள் நிறைவு- தென்மாவட்டம் டூ இனி சென்னை செல்பவர்கள் நிம்மதியா செல்லலாம்
தென்மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், தேனி, சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, புதுக்கோட்டை என பல்வேறு மாவட்ட மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு தாண்டிதான் சென்னை சென்றாக வேண்டும்.
ஆனால் இந்த சாலையில் எந்த பழுதும் இல்லை என்றாலும் கடந்த சில வாரங்களாக செங்கல்பட்டு அருகேயுள்ள பாலாறு பாலத்தில் வேலைகள் நடைபெற்றதால் சென்னை செல்லும் வாகனங்கள் அனைத்தும் செங்கல்பட்டுக்கு முன்னால் பல கிலோ மீட்டர்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
ஏற்கனவே செங்கல்பட்டுவை நெருங்கி விட்டால் வாகனபோக்குவரத்து அதிகமாய் இருக்கும் இந்த நிலையில் இது போல வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டதால் மிக அதிகமாக வாகன நெருக்கடி ஏற்பட்டது .
தற்போது பாலாறு பாலம் பணிகள் முடிவடைந்து விட்டதால் இந்த எந்த பிரச்சினையும் இல்லாமல் வழக்கமான பாதையில் வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது.
