cinema news
குண்டு மூஞ்சிக்காரன் எனக்கு வேண்டாம்…ரசகுல்லா தான் வேணும் அடம்பிடித்த மனோரமா…
‘ஆச்சி’ என அன்பாக அழைக்கப்பட்டவர் மனோரமா திரைத்துறையில். அவரது இடத்தை நிரப்ப இன்று வரை வேறு எந்த நடிகையாளும் முடியவில்லை என்பதனை சில நேரங்களில் நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டிய என்ற கட்டாய நிலை தான் தொடர்கிறது இன்று வரை.
நகைச்சுவை கதாபாத்திரங்களோடு மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களாக இருந்தாலும் சரி எதை கொடுத்தாலும் அதைக் கச்சிதமாக முடித்துக் கொடுத்து நடிப்பில் பெயர் வாங்கியவர் தான் மனோரமா.
சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ, கே.ஆர்.விஜயா நடித்த “உயர்ந்த மனிதன்” படத்தில் இவர் நடித்துள்ளார். அந்த படத்தில் இவர் சிவகுமாரை காதலிப்பது போல காட்சி இருக்குமாம். ஆனால் நகைச்சுவை நடிகர் வி.கே. ராமசாமி மனோரமாவுக்கு ரூட் விடுவார். அப்பொழுது மனோரமா வி. கே. ராமசாமியை பார்த்து இந்த குண்டு மூஞ்சிக்காரர் எனக்கு வேண்டாம் எனக்கு அந்த கல்கத்தா ரசகுல்லா தான் வேண்டும் என சிவகுமாரை குறிப்பிட்டு சொல்லுவாராம்.
மேலும் சிவகுமாருடன் படத்தில் வரும் காட்சிகளில் எல்லாம் அவரை பார்த்து ரசிப்பது போலவே காட்சிகள் இருந்ததாம். அதே போல ராமசாமி மனாரமாவாய் பார்த்து ஜொள்ளு விடுவது போல் தான் அவரது கதாப்பாத்திரம் இருந்ததாம்.
சிவக்குமார் தன்னை விட்டுப் போய் விடக்கூடாது என்பதற்காக அவரின் மீதான அதிக அன்பை தெரியப்படுத்த விதமாக எதிர்மறையாகவே செயல்படுவாராம் படத்தில். சிவகுமாரை பற்றிய வசனங்களை பேசியிருந்தாராம். இப்படிப்பட்ட தனது அனுபவத்தை மனோரமாவே ஒரு முறை சொல்லி இருக்கிறார். கிட்ட தட்ட அது ஒரு வில்லி கதாப்பாத்திரம் போலவே இருந்ததாகவும் அவர் சொல்லியிருந்தார்.