பவித்ரன் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் “சூரியன்”. இந்த படத்தில் கவுண்டமணியின் நகைச்சுவை இன்று வரை பேசப்பட்டு வருகிறது. அதேபோல அந்த படத்தினுடைய வெற்றிக்கு மிகப்பெரிய பக்க பாலமாக அமைந்தது படத்தினுடைய பாடல்கள்.
இந்த படத்தில் தான் தமிழ் சினிமாவின் முதல் கானா பாடலை தேவா இசையமைத்து கொடுத்திருப்பார். மனோ பாடலை பாட, சரத்குமாருடன் பிரபு தேவா நடனமாடியிருப்பார்.
பாடல்கள் அமைப்பது குறித்து தேவாவிடம் பவித்ரன் பேசும் பொழுது சரத்குமார், ரோஜா இருவருக்கும் திருமணம் ஆகி முதலிரவுக்கு செல்ல தயாராகிக் கொண்டிருக்கிற நேரத்தில் சரத்குமார் வீட்டு வாசலில் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடலை கேட்டுக் கொண்டிருப்பாராம். அப்பொழுது கதாநாயகி ரோஜா கந்த சஷ்டி கவச பாடல்களை கேட்க வேண்டிய நேரமா இது? என சரத்குமாரை உள்ளே அழைத்து சென்று வாங்க நான் பாடிக் காட்டுகிறேன் என பாடலை பாடுவாராம். “பதினெட்டு வயது இளமொட்டு மனது” பாடல் தான் அது.

இந்த சிட்டுவேஷனுக்காகத்தான் பாடலின் முதல் இரண்டு வரிகளும் கந்த சஷ்டி கவசம் பாடல் வருவது மெட்டினை அமைத்தாராம். ஆனால் படத்தின் நீளம் கருதி அந்த காட்சியை வெட்டிவிட்டார்கள். இந்த விஷயம் இறுதி வரை தேவாவிற்கு தெரியாதாம். கடைசியில் கந்த சஷ்டி கவச பாடலை காப்பி அடித்து விட்டார். அதே போல் மெட்டினை அமைத்து விட்டார் என தேவாவை பழிசொல்லி கலாய்த்து வந்துள்ளனர். இயக்குனர் கேட்டது போலவே இசையமத்து கொடுத்தும் தனக்கு மிகப்பெரிய அவப்பெயர் வந்துவிட்டது என தேவா ஒரு முறை சொல்லியிருக்கிறார்…