cinema news
மறுபடியும் மொதல்ல இருந்தா!…இப்பவும் கையில பஞ்சுமிட்டாய் தானா?…அடிச்ச தூள் பண்ணின நெப்போலியன்…
ரஜினியின் மெஹா ஹிட் படமான “எஜமான்” படத்தில் வல்லவராயனாக நடித்தவர் நெப்போலியன். அடுத்ததடுத்து வில்லனாக நடித்து வெளுத்து வாங்கியவர் இவர்.
“கிழக்கு சீமையலே” பாரதிராஜா படத்தில் நடித்தது இவருக்கு கூடுதல் பலமாக அமைந்தது. வில்லனாக மட்டுமே நடித்திருக்காமல் இவர் கதாநாயகனாவும் நடித்திருக்கிறார்.
சில படங்களில் கதாநாயகனுக்கு நண்பனாக, அவர்களுக்கு இணையான வேடத்திலும் நடித்து வந்தார். “விருமாண்டி” படத்தில் கமலுடனும், “தென்காசி பட்டணம்” படத்தில் சரத்குமாரின் நெருங்கிய நண்பராக வந்திருப்பார், படத்தில் கிட்டத்தட்ட சரத்குமாருக்கு இணையான கதாப்பாத்திரம் தான் என்றே சொல்ல வேண்டும்.
அதெ போல “போக்கிரி” படத்தில் விஜய்க்கு கிடைத்த கவனத்தை போலவே இவரையும் அதிகான கண்கள் பார்த்து ரசித்தது. மீண்டும் சரத்குமாருடன் “ஐயா” படத்தில் அய்யத்துரை சரத்திற்கு நண்பனாக, படத்தின் நாயகி நயன்தாராவிற்கு அப்பவாக என வெளுத்து வாங்கியிருப்பார் நடிப்பில். இப்படி ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் நெப்போலியன் இல்லாத படங்கள் இருக்கவே இருக்காது என சொல்லலாம்.
ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தவருக்கு பெண் ரசிகைகளின் பார்வையை இவர் மீது விழ வைத்த படம் “எட்டுப்பட்டி ராசா”. ஊர்வசி, குஷ்பூ என இரண்டு கதா நாயகிகள் படத்தில் நெப்போலியனுக்கு. கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தின் பாடல்கள் எல்லாமே மெஹா ஹிட்.
அதிலும் குறிப்பாக ‘பஞ்சு மிட்டாய் சீல கட்டி, பட்டு வண்ண ரவிக்கை போட்டு’ பாடல் வெளியான நேரத்தில் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து வந்தது.
மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி பாடியிருந்த இந்த பாடலுக்கு தேவா இசையமைத்திருந்தார். ஒரு காலத்தில் தமிழகத்தையே குலுக்கிய இந்த பாடலை நெப்போலியன் தற்போது பாடும் வீடியோ வைரல் ஆகிவருகிறது.
அவரது பாடலுக்கு ஏற்றார் போல குழுவினர் நடனமாடுகிறார்கள். இந்த பாடல் மீண்டும் வெளிவந்து எப்படி வைரலாகியதோ அதே போல நெப்போலியனும் மீண்டும் நடிப்பில் தீவிரம் காட்ட வேண்டும் எனபது அவரது ரசிகர்களின் ஆசையாக கூட இருக்கலாம்.