- Homepage
- cinema news
- ஒன் மேன் ஷோ காட்டி வரும் யோகக்கார யோகி பாபு!…மண்ட கர்வம் வந்திர கூடாது மண்டேலாவுக்கு?…
ஒன் மேன் ஷோ காட்டி வரும் யோகக்கார யோகி பாபு!…மண்ட கர்வம் வந்திர கூடாது மண்டேலாவுக்கு?…
தமிழ் சினிமாவில் இப்போது சொல்லும் படியான நகைச்சுவை நடிகர்கள் இல்லை என்ற நிலை தான் இருந்துவருகிறது, விவேக் காலமாகி விட்டார், கவுண்டமணியின் காமெடி நடிப்பு காலாவதியாகிவிட்டார். வடிவேலுவை பற்றி சொல்லவே வேண்டாம் “மாமன்னன்” படத்திற்கு பிறகு சீரியஸான கேரக்டர்களில் நடிக்க வாய்ப்புகள் வருகிறது என அவரது வாயாலையே சொல்லியிருக்கிறார்.
செந்தில் எங்க இருக்கிறார் என தேடும் நிலை தான் உள்ளது. சந்தானம் தில்லு காட்டினாத்தான் துட்டு வரும் என சொல்லி கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என நடித்து வருகிறார்.
சூரி “கருடன்” படத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பை பார்த்த ரசிகர்கள் நீங்களே இனி காமெடியனாக நடித்தாலும் நாங்க அதை எல்லாம் ஏத்துக்கமாட்டோம்ன்னு ரசிகர்கள் வரிஞ்சி கட்டிக்கொண்டு நிற்கின்றார்கள் சூரிக்கு பின்னனியாக.
இந்த நிலையில் ஆள் இல்லாத காட்டிற்குள் அட்டகாசம் பண்ணும் ஒரே காமெடியனாக இருப்பது யோகி பாபு தான். இவரும் இடையில் ரஜினி, அஜீத், விஜய் என தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னனிகள் பலருடனும் நடித்து விட்டார் இவர். “காக்கா முட்டை” படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக்கொடுத்தது.
சமீபத்தில் வெளியான தமிழ் படங்களை நன்றாக அலசிப்பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரியும் சமீபகாலமாக அதிக படங்களில் நடித்து வரும் காமெடியன் இவர் மட்டும் தான் என்று. சில படங்களில் ஹீரோவாகக்கூட இவர் வந்திருக்கிறார்.
இப்படி இருக்கையில் நல்ல மார்க்கெட் இருக்கிறது என்ற மண்டை கர்வத்தில் நீங்களும் கதாநாயகனாக மட்டும் தான் நடிப்பேன் என சொல்லி விடாதீர்கள். நாங்களெல்லாம் பார்த்து ரசிக்க கூடிய ஒரே காமெடியனாக நீங்கள் மட்டுமே இருந்து வருகிறீர்கள் என சொல்லி வருகின்றார்களாம் யோகி பாபுவின் ரசிகர்கள்.