cinema news
படம் பண்ணலாமா அழைப்பு விடுத்த அஜீத்!…ஷங்கர் தான் சரியா வருவார்!…தட்டி தூக்க தயாராகும் தல?…
“விடாமுயற்சி”யை எப்படியாவது தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணியே ஆகனும்னு முனைப்பு காட்டி வருகிறாராம் அஜீத்ன்னு ஒரு தகவல் பரவியது. “குட் பேட் அக்லி” படத்தின் ஷூட்டிங்கும் பரபரப்பாக போய் கொண்டிருக்கிறதாம்.
பைக் டூர் போவது, பிரியாணி செய்வது இதை எல்லாம் கொஞ்ச நாட்களுக்கு தள்ளி வைக்கலாம் என முடிவெடுத்திருக்கிறாம் ஏ.கே. விஜய் இடம் விரைவில் காலியாகும் என எதிர்பார்க்கபடும் நிலையில் தனது சினிமா கேரியரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல அதிக ஆர்வம் காட்டுகிறாராம் அஜீத்.
தன்னை வைத்து இதற்கு முன்னர் வெற்றியை கொடுத்த இயக்குனர்களின் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு அலைகிறாராம் அவர். விஜயின் கடைசி படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் படத்தினை இயக்கப்போவது ஹெச்.வினோத் தான் என்பது ஏறக்குறைய முடிவாகி விட்டது.
அஜீத்தை வைத்து அடுத்தடுத்து படங்களை இயக்கியவர் தானே வினோத். மீண்டும் வினோத்துடன் சேர்ந்து படம் பண்ணலாம் என முடிவெடுத்து அவரை தொடர்பு கொண்டிருக்கிறாராம் அஜீத்.
விஜய் படத்தை எப்போது துவக்கி, எப்போது முடிப்பீர்கள் என கேட்ட தோடு நல்ல ஒரு சப்ஜெக்டை ரெடி பண்ணுங்க ஒன்னா டிராவல் பண்ணலாம்னு பச்சை கொடியை தூக்கி காட்டியிருக்கிறார் வினோத்திடம்.
இது ஒரு பக்கம் இருக்க “இந்தியன் – 2” படத்தை முடித்து விட்ட ஷங்கர், “கேம் சேஞ்சர்” படத்தில் தீவிரம் காட்டி வர, அதன் பிறகு “வேல்பாரி”யை துவக்கலாம் என்ற முடிவில் இருக்கிறார்.
ஷங்கரும், அஜீத்தும் கடந்த வாரம் சந்தித்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஒரு வேளை அஜீத் “வேல் பாரி” யில் இணைவதற்காகவா? அல்லது இந்த படத்தை ஷங்கர் முடித்த பின்னர் அடுத்த படத்திற்கான பேச்சு வார்த்தையா? அது என கேள்வி எழுப்பியுள்ளார் பிரபல விமர்சகர் ‘வலைப்பேச்சு’ அந்தணன்.