---Advertisement---

லைவ் வேண்டும் என கேட்ட மருத்துவர்கள்… 2 மணி நேரம் காலி சேர்களுடன் காத்திருந்த மம்தா…!

By Sri
Published on: September 13, 2024
---Advertisement---

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மருத்துவர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் 2 மணி நேரமாக காத்திருந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யபட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த விவகாரத்தில் பெண் மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

உயிரிழந்த பெண் மருத்துவர் நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மருத்துவர்கள் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேற்கு வங்கம் மாநில முதல்வரும் போராட்டத்தை கைவிட்டு மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்ற கூறி வருகிறார்கள். ஆனால் இதனை ஏற்க மறுத்த மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் மேற்குவங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி மருத்துவரிடம் நேரில் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்திருந்தார். இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்கு முதலில் சம்மதம் தெரிவித்த மருத்துவர்கள் முதல்வருடனான பேச்சுவார்த்தையை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் மாநில அரசு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டது.

பேச்சுவார்த்தை நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் வரை பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்ள மாட்டோம் என்று மருத்துவர்கள் உறுதியாக தெரிவித்தார்கள். இன்றைய பேச்சு வார்த்தையில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள இருந்த நிலையில் அவர் மருத்துவரிடம் பேச்சுவார்த்தை நடத்த கேட்ட இரண்டு மணி நேரமாக காத்திருந்தார். இருப்பினும் மருத்துவர்கள் மற்றும் முதல்வர்கள் இடையேயான சந்திப்பு நடைபெறவே இல்லை.

“நாங்கள் முதல்வரை ராஜினாமா செய்யக் கோரிக்கை வைக்கவில்லை. அதற்கான அழுத்தம் கொடுக்கவும் நாங்கள் இங்கு வரவில்லை. மருத்துவமனையில் கொலை செய்யப்பட்ட மருத்துவர் நீதி வேண்டி எங்களின் கோரிக்கையுடன் இங்கு வந்திருக்கின்றோம். எங்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வேண்டும். பேச்சுவார்த்தையே நடக்கவில்லை என்பது எங்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கின்றது. எங்களுக்கு பதில் கிடைக்கும் என்று இப்போதும் காத்துக் கொண்டிருக்கின்றோம்” என்று போராட்டத்தில் ஈடுபட மருத்துவர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Conceptual graphic representing the exciting collaboration between director Mohan Raja and actor Karthi.

எம்.குமரன் மற்றும் தனி ஒருவன் கலவை: கார்த்தி ஜோடிக்கும் மோகன் ராஜா – அதிகாரப்பூர்வமாக வெளியான செம மாஸ் அப்டேட்!

Conceptual graphic representing the collaboration between actor Vishal and director RS Durai Senthilkumar for 7 Screen Studio.

விஷாலின் புதிய படம் குறித்து லேட்டஸ்ட் தகவல்: லலித் குமார் உதவியால் மீண்டும் இணையும் கூட்டணி – இயக்கவிருக்கும் பிரபல இயக்குநர்!

Concept graphic celebrating Maestro Ilaiyaraaja's soulful composition of the Muthumani song for Dorothy.

இளையராஜாவின் மேஜிக் ஹார்மோனியம்: ‘டொரா தி’ படத்தின் ‘முத்துமணி’ பாடல் குறித்து உருக்கமான பதிவை வெளியிட்ட படக்குழு!

Official release date announcement poster for Fahadh Faasil's Don't Trouble The Trouble.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஃபஹத் பாசிலின் ‘டொண்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ புதிய ரிலீஸ் தேதி வெளியீடு!

Popular Kollywood actor brothers Suriya and Karthi sharing a warm bond.

கார்த்தி பற்றி நடிகர் சூர்யா நெகிழ்ச்சிப் பேச்சு: “அவன் வழி தனி வழி.. அவனுக்கு சினிமாதான் உலகம்!” வைரலாகும் பாராட்டு!

Social media star Amala Shaji making her acting debut in Vikram Prabhu's upcoming film.

Amala Shaji Acting Debut: பிரபல இன்ஸ்டாகிராம் ஸ்டார் அமலா ஷாஜி என்ட்ரி: விக்ரம் பிரபு படத்துடன் நடிகையாக அறிமுகம் – செம குஷியில் ரசிகர்கள்!