தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களாகத் திகழும் சகோதரர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இடையேயான பாசமும், ஒருவருக்கொருவர் காட்டும் ஆதரவும் எப்போதும் ரசிகர்களால் ரசிக்கப்படும் ஒன்றாகும். இந்நிலையில், நடிகர் கார்த்தி குறித்து சூர்யா அளித்துள்ள ஒரு பேட்டி தற்போது இணையத்தில் அதிகளவில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து நடிகர் சூர்யா பேசுகையில், “நமக்கும் கார்த்திக்கும் இடையே எந்தப் போட்டியும் பொறாமையும் கிடையாது. அவன் வழி தனி வழி. நிறைய பேர் என்னிடம் வந்து, ‘நான் உங்கள் தம்பியோட பெரிய ஃபேன் சார்.. தம்பிகிட்ட சொல்லுங்க சார்..’ என்று கூறுவார்கள். அவர்கள் என்னைப் பற்றிப் பேசக்கூட மாட்டார்கள். என்னை விட அவன் சினிமாவைத் தாண்டி ஆழமாகச் சிந்திக்கிறான். தான் பெறும் அன்பிற்காக தான் என்ன செய்ய முடியும் என்றும், ஒரு நடிகனாக எவ்வளவு உண்மையாக இருக்க முடியும் என்றும் அவன் ஒவ்வொரு நிமிடமும் யோசித்துக்கொண்டே இருக்கிறான்” என நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார்.













