---Advertisement---

மீண்டும் ஜோடியாக இணைவார்களா சூர்யா – ஜோதிகா? மனம் திறந்த பவர் கப்பிள்!

By Sri
Published on: August 4, 2026
Recent interview visual of actors Suriya and Jyothika.
---Advertisement---

தமிழ் சினிமாவின் மிகவும் விரும்பப்படும் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘காக்கா காக்கா’, ‘சில்லுனு ஒரு காதல்’ என பல வெற்றிப்படங்களில் இணைந்து நடித்த இவர்கள், காதலித்து கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்டரிக்கு இன்றும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், திருமணத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் ஏன் மீண்டும் இணைந்து திரையில் நடிக்கவில்லை என்பது குறித்து ஒரு நேர்காணலில் மனம் திறந்து பேசியுள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள நடிகர் சூர்யா, “இதுபோன்ற ஒரு போட்டோஷூட் எங்கள் திருமணத்திற்கு முன்பாக, நாங்கள் இணைந்து நடித்த காலத்தில்தான் நடந்தது. நாங்கள் ஒரு இயக்குனரிடம் சென்று கதை கொடுத்து எங்களுக்காக இயக்கச் சொல்ல விரும்பவில்லை. ஒரு படம் இயல்பாகவே அமைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பேசிய நடிகை ஜோதிகா, “கடந்த 25 ஆண்டுகளில் எங்களுக்காக இணைந்து நடிக்க யாரும் ஒரு கதையுடன் அணுகியதில்லை. திருமணத்திற்குப் பிறகு நாங்கள் ஒரு திரை ஜோடியாக பார்க்கப்பட்டோம் என்று நான் நினைக்கவில்லை. மக்கள் எங்களை நிஜ வாழ்க்கையில் பெரிதும் நேசிக்கிறார்கள், ஆனால் திரையில் எங்களது திருமணத்திற்குப் பிறகு அது அப்படியே நின்றுவிட்டது (Cut…). நாங்கள் ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று சொல்லும் படியான ஒரே ஒரு ஸ்கிரிப்ட் கூட இதுவரை எங்களுக்கு வரவில்லை” என்று விளக்கமளித்துள்ளார். இவர்களின் இந்த வெளிப்படையான பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official 'First Move' promotional poster for Dhruv Vikram's action film Jackie.

துருவ் விக்ரமின் ‘ஜாக்கி’ படத்தின் ஃபர்ஸ்ட் மூவ் அப்டேட்: சந்தோஷ் நாராயணன் இசையில் விறுவிறுப்பாக நடக்கும் படப்பிடிப்பு!

Official trailer promotional graphic for Keerthy Suresh and Karthick Subbaraj's Dorothy.

கார்த்திக் சுப்புராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’ ட்ரெய்லர்: கிராமத்து பின்னணியில் மிரட்ட வரும் இசைஞானி இளையராஜா காவியம்!

Official promotional poster for the Marathi film gondhal, India's official entry to the 2027 Oscars.

2027 ஆஸ்கார் களத்தில் மராத்தி படம்: இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவுப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘கொண்டால்’!

Official announcement poster for Bhavana Studios' upcoming multilingual comedy-drama Picnic.

பிரேமலு தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த மெகா படம்: குடும்பத்துடன் கொண்டாட வரும் ‘பிகினிக்’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Recording studio setup during the official dubbing commencement of VJ Siddhu's Dayangaram.

விஜே சித்துவின் ‘டயங்கரம்’ பட அப்டேட்: பிரம்மாண்டமான முறையில் தொடங்கும் டப்பிங் பணிகள் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official character look poster of Suraj Venjaramoodu as 'Dileep' in Jailer 2.

ஜெயிலர் 2 மிரட்டலான கேரக்டர் ரிவீல்: ‘திலீப்’ கதாபாத்திரமாக களமிறங்கும் தேசிய விருது நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு!