---Advertisement---

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஃபஹத் பாசிலின் ‘டொண்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ புதிய ரிலீஸ் தேதி வெளியீடு!

Published on: September 1, 2026
Official release date announcement poster for Fahadh Faasil's Don't Trouble The Trouble.
---Advertisement---

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஃபஹத் பாசிலின் புதிய திரைப்படமான ‘டொண்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble) குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக செப்டம்பர் 11-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், தற்போது ஒத்திவைக்கப்பட்டு புதிய தேதியில் திரைக்கு வரவுள்ளது.

ஷசாங்க் யெலேட்டி இயக்கத்தில், ஃபஹத் பாஸில் மற்றும் குழந்தை நட்சத்திரம் சாரா பலேகர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (October 2) உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு காலா பைரவா இசையமைத்துள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த தெரு மந்திரவாதியாக ஃபஹத் பாஸில் நடித்துள்ள இந்த ஃபேண்டஸி திரைப்படத்தின் புதிய ரிலீஸ் அறிவிப்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.