மலையாளத் திரையுலகில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற நகைச்சுவை கலந்த டைம்-லூப் திரைப்படமான ‘தூமகேது’ (Dhoomakethu) குறித்த அதிகாரப்பூர்வ ஓடிடி வெளியீட்டுத் தகவல் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி முடித்ததைத் தொடர்ந்து, இப்படம் தற்போது டிஜிட்டல் தளத்தில் காலடி எடுத்து வைக்கிறது.
வரும் அக்டோபர் 23, 2026 அன்று முன்னணி ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் இப்படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. மலையாளம் மட்டுமின்றி இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளிலும் இப்படம் பான்-இந்திய அளவில் ரிலீசாகிறது. தென்னிந்தியத் திரைப்படங்களை ஒரே இடத்தில் கண்டு ரசிக்கும் வகையில் நெட்ஃபிளிக்ஸ் பிரத்யேகமாக வழங்கி வரும் ‘சவுத்வெர்ஸ்’ (Southverse) ஹப்பின் கீழ் இப்படம் இடம்பெற்றுள்ளது.
View this post on Instagram
இயக்குநர் சுதி மட்டிசன் இயக்கத்தில், சஜின் கோபு மற்றும் நிகிலா விமல் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படம், தன் திருமண நாளுக்கு முந்தைய இரவில் சிக்கிக்கொள்ளும் ஒரு வாலிபனின் சுவாரஸ்யமான டைம்-லூப் குழப்பங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கணேஷ், மஞ்சு பிள்ளை மற்றும் ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரையரங்குகளில் மிஸ் செய்த சினிமா ரசிகர்கள் தங்களது வீடுகளில் குடும்பத்துடன் கண்டுகளிக்க இந்த ஓடிடி வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.













