---Advertisement---

சமூக வலைதளப் பதிவுகளால் வெடித்த சட்டப் போராட்டம்… பாடகி கெனிஷாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

Published on: November 27, 2026
Formal Indian courtroom legal gavel and scale visual representing the Madras High Court order in Aarti Ravi's defamation case against Kenishaa.
---Advertisement---

நடிகர் ரவி மோகனின் (Ravi Mohan) மனைவி ஆர்த்தி (Aarti) தொடர்ந்த அவதூறு வழக்கில், பாடகி கெனிஷா (Kenishaa) வருகிற டிசம்பர் 3-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வரும் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ஆகியோரின் விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே, ரவி மோகனுடன் பாடகி கெனிஷா நெருக்கமாக இருப்பதாகவும், அவரைத் தனது தோழி என ரவி மோகன் கூறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில், தன்னைப் பற்றிச் சமூக வலைதளங்களில் கெனிஷா அவதூறாகப் பதிவிட்டதாகக் கூறி ஆர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும், ஏற்கெனவே சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அவதூறுப் பதிவுகளை நீக்க வேண்டும் எனவும் ஆர்த்தி கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கில் பதிலளிப்பதற்காகப் பாடகி கெனிஷா டிசம்பர் 3-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Misty Ooty hill landscape at dusk representing the emotional father-daughter drama Appa Kutty starring Vijay Antony.

தமிழ் ரசிகர்களைக் கட்டிப்போட்ட உணர்வுப்பூர்வ பயணம்… ‘அப்பா குட்டி’ படத்திற்கு ஏன் இவ்வளவு பாசிட்டிவ் வரவேற்பு?

Warm South Indian music studio and live performance atmosphere representing Varun Murali's debut as music composer for Shanthi Talkies.

சென்னை மேடைகளில் கலக்கிய இசைக் கலைஞர்… இப்போது சாந்தி டாக்கீஸ் படத்தில் இசையமைப்பாளர் அவதாரம்!

High-impact South Indian cinema production slate and dramatic lighting visual representing Vijay Antony's Pichaikkaran 3 and Manthira Moorthy project updates.

‘பிச்சைக்காரன் 3’… விஜய் ஆண்டனி கெரியரில் அதிக பட்ஜெட் படமாக உருவாகிறதா?

High-tension South Indian cinema camera lens and dramatic studio lighting visual representing Ajith Kumar's DareDevil buzz.

பொது நிகழ்ச்சிகளைத் தவிர்க்கும் அஜித் குமார்… ‘டேர்டெவில்’ படத்தில் ரசிகர்களுக்காக ஒளிந்திருக்கும் அந்த ஸ்பெஷல் சீக்ரெட் என்ன?

Atmospheric South Indian romantic fantasy cloudscape at twilight representing Vishnu Vishal and Mamitha Baiju's Irandu Vaanam eyeing a Christmas release.

தீபாவளிக்குத் தள்ளிப்போன படம் இப்போது கிறிஸ்துமஸுக்கு வருகிறதா? ‘இரண்டு வானம்’ ரிலீஸ் குறித்து வெளியான புதிய தகவல்!

High-voltage South Indian filmmaking set visual representing Jithu Madhavan's next project after Aavesham and Scene.

தமிழ் சினிமாவில் சிக்ஸர் அடித்த ஜித்து மாதவன்… அடுத்ததாக தெலுங்கு திரையுலகில் களமிறங்குகிறாரா?