தேசிய விருது பெற்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Rajkumar Periyasamy) இயக்கத்தில், தனுஷ் (Dhanush) மற்றும் மம்மூட்டி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ஓம் – சாப்டர் 1: உதிரம்’ (Om – Chapter 1: Udhiram) திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்தில் பிரபல நடிகை ஸ்ரீலீலா (Sreeleela) இதுவரை தான் நடித்திராத அளவிற்கு முற்றிலும் மாறுபட்ட, குடும்பப்பாங்கான மற்றும் கிராமத்துத் தன்மையைக் கொண்ட ‘ரோஜா’ (Roja) என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு மனைவியாக அவர் நடிக்கவிருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மிகத் துல்லியமாகத் தேர்ந்தெடுத்துள்ள இந்தக் காஸ்டிங் கலவை, படத்தின் மிகப்பெரிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
View this post on Instagram
மறுபுறம், இளம் இசைப் புயல் சாய் அபயங்கரின் (Sai Abhyankkar) இசையில் படத்தின் விளம்பரப் பணிகளுக்காக (Promos) உருவாக்கப்பட்ட ட்யூன்கள் மற்றும் பின்னணி இசை கேட்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அற்புதமாக வந்துள்ளதாகத் திரையுலகினர் பாராட்டி வருகின்றனர். தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகும் இத்திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.













