---Advertisement---

ஊரடங்கால் இந்தியாவில் 2 கோடி குழந்தைகள் அதிகமாக பிறக்கும் வாய்ப்பு! அதிர்ச்சி தகவல்!

By Sri
Published on: May 8, 2020
---Advertisement---

ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உலகளவில் அதிகமாக 10 கோடி குழந்தைகள் பிறக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஊரடங்கின் தொடக்கத்தில் ஆணுறை போன்ற கருத்தடை சாதனங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டதால் ஒரு கட்டத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டது.

கருத்தடை சாதனங்களின் தட்டுப்பாட்டால் உலகம் முழுவதும் 70 லட்சம் பெண்கள் கர்ப்பம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐநா மக்கள் நிதியம் மற்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 4.7 கோடி பேர் கருத்தடை சாதனங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தேவையற்ற கர்ப்பம் ஏற்படலாம் என அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில்  இந்தியாவில் இந்தாண்டு இறுதிக்குள் வழக்கத்தைவிட கூடுதலாக 2 கோடி குழந்தைகள் பிறப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் இந்த எண்ணிக்கை 10 கோடியாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக அதிக பெண்கள் கருதரித்திருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.