தமிழகத்தில் கொரொனா தொற்று பரவாமல் தடுக்க, நான்கு கட்டமாக ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில், மேலும் 5ம் கட்டமாகவும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனையடுத்து, தமிழகத்தில் ஒரு சில தளர்வுகள் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் சிறிய நகைக் கடைகள் (ஏசி இல்லாமல்) ஒருசில நிபந்தனைகளுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,476-க்கும்; ஒரு சவரன் ரூ.35,808-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.52.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.













