---Advertisement---

அரசு மருத்துவமனையில்… மதுபோதையில் மயங்கி கிடந்த மருத்துவர்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!

By Sri
Published on: September 11, 2024
---Advertisement---

அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர் மது போதையில் மயங்கி கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

திருவள்ளூர் மாவட்டம், அரசு மருத்துவமனையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். 150கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றன. இந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் தினந்தோறும் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

இந்நிலையில் நேற்று இரவு அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர் ஒருவருக்கு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. பணிக்கு வந்த மருத்துவர் அதிக மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகின்றது. அவர் நோயாளிகளுடன் இருந்த உறவினர்களை ஓறுமையில் பேசி திட்டி அனுப்பி இருக்கின்றார். அவர் மதுபோதை மயக்கத்தில் ஆஸ்பத்திரி வெளியே உள்ள திண்ணையில் படுத்து உறங்கினார்.

இதை கண்டு அரசு மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு உள்ளே செல்லும்படி தெரிவித்தார்கள். ஆனால் போதையில் இருந்த டாக்டர் ஆஸ்பத்திரிக்குள் செல்ல மருந்து ரகளையில் ஈடுபட்டார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த ஊழியர்கள் மருத்துவரை காவலாளி தங்கும் அறையில் படுக்க வைத்தார்கள்.

இன்று காலை நீண்ட நேரத்திற்கு பிறகு போதை தெளிந்ததும் அந்த மருத்துவர் புறப்பட்டு சென்ற அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த மருத்துவர் மதுபோதையில் தூங்கி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தார்கள்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.