---Advertisement---

பைலட் முதல் சினிமா இயக்கம் வரை: மனம் திறந்த ஜேசன் சஞ்சய்!

By Sri
Published on: August 1, 2026
Director Jason Sanjay speaking during his recent exclusive interview about Sigma and his career.
---Advertisement---

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரத்தின் மகனும், ‘சிக்மா’ (Sigma) படத்தின் மூலம் இயக்குநராகக் களமிறங்கும் ஜேசன் சஞ்சய் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சினிமா பயணம் குறித்து பல சுவாரஸ்யமான உண்மைகளைப் பகிர்ந்துள்ளார்.

சிறு வயதில் பைலட் அல்லது கிரிக்கெட் வீரராக வேண்டும் என்று ஆசைப்பட்ட அவர், பின்னர் திரைப்படத் துறையை நோக்கித் தனது பயணத்தைத் திருப்பியது குறித்துப் பேசியுள்ளார். முதல் ஐபிஎல் (IPL) சீசனின் போது தனது தந்தை விஜய் தன்னை அழைத்துச் சென்ற நினைவுகளையும் அவர் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.

தனது ஃபேவரட் இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா தனது ‘சிக்மா’ படத்திற்காக ஒரு பாடலைப் பாடியுள்ளதாகத் தெரிவித்துள்ள ஜேசன் சஞ்சய், அவரை முதல்முறை சந்தித்துப் பேசிய அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார். அவரிடம் தனது தந்தை விஜய்யின் நலம் விசாரித்ததாகவும், அவர் ஏன் அடிக்கடி சென்னை வராமல் துபாயில் செட்டில்லாகிட்டங்க? என்று கலகலப்பாகக் கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் towering personality-யாகத் திகழும் தந்தை விஜய்யின் லெகசியைக் கொண்டு செல்வது குறித்துப் பேசுகையில், “இது இப்போது நடந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க புரட்சி. எனக்கும், என் தங்கைக்கும் மற்றும் குடும்பத்தைச் சார்ந்த அனைவருக்கும் இது ஒரு கூடுதல் பொறுப்பு. என் தந்தை எனக்குச் சொந்தமான அடையாளத்தை உருவாக்க விரும்பினார். எந்த உதவியாக இருந்தாலும் நீங்களே முன்வந்து கேளுங்கள் என்று அவர் சுதந்திரம் அளித்துள்ளார்” என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

 

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official announcement banner for the M.S. Subbulakshmi biopic starring Rashmika Mandanna.

எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக்: லெஜண்ட் பாடகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, கவுதம் தின்னகானுரி இயக்குகிறார்!

Character reveal poster featuring Ramya Krishnan as Kamala Reddy in the film David Reddy.

“டேவிட் ரெட்டி’ படத்தில் ரம்யா கிருஷ்ணன்: மிரட்டலான ‘கமலா ரெட்டி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Visual representation of the Ajith Kumar Racing video shared on Vijay's Instagram.

தளபதி விஜய்யின் இன்ஸ்டாவில் அஜித்தின் கார் பந்தய வீடியோ: 18 மணி நேரத்தில் 2 மில்லியன் லைக்குகளைக் குவித்து சாதனை!

Social media image of popular Tamil serial actress Reshma Muralidharan.

“கவர்ச்சி போட்டோக்களால் வந்த வினையா? கணவரைப் பிரிந்த சீரியல் நடிகை ரேஷ்மா முரளிதரன் குறித்த ஷாக்கிங் தகவல்!

Official title announcement poster for Chiyaan Vikram's Powerhouse.

சீயான் விக்ரமின் ‘பவர்ஹவுஸ்’: சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அதிரடியான டைட்டில் அவுட்!

Official theatrical release banner for Nani's upcoming action drama The Paradise.

“தி பாரடைஸ்’ ரிலீஸ் அப்டேட்: இன்னும் 9 நாட்களில் திரைக்கு வரும் நானியின் மாஸ் படம்!