---Advertisement---

Vijay Sethupathi’s Request To CM Vijay! — “அரசு ஓடிடி தளம் ஆரம்பிங்க சார்!” — தியேட்டர் டிக்கெட் விலையை உயர்த்த கோரிக்கை; மேடையில் ஓப்பனாகப் பேசிய விஜய் சேதுபதி!

Published on: May 26, 2026
Actor Vijay Sethupathi speaking at a stage making important requests to Chief Minister Vijay regarding cinema industry growth.
---Advertisement---

தமிழ் சினிமாவுல மனசுல பட்டதை ஓப்பனாகவும் பேசக்கூடிய ஒரு மிகச்சிறந்த நடிகர் தான் நம்ம ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி. அண்மையில சினிமா விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், தற்போதைய தமிழ் சினிமாவோட பிசினஸ் நிலவரம் மற்றும் தயாரிப்பாளர்களின் கஷ்டங்கள் குறித்து பல முக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அதுமட்டுமில்லாம, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு மிக முக்கியமான கோரிக்கைகளையும் மேடையில் ஓப்பனாக முன்வைத்துள்ளார்.

விஜய் சேதுபதி பேசும்போது, “முன்னதாக உலகநாயகன் கமல் சார் கேட்டுக் கொண்டதை போல, தமிழக அரசு சார்பாக ஒரு பிரத்தியேக ஓடிடி (OTT) தளத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் விஜய் சார் அவர்களிடம் ஒரு மிக முக்கியமான வேண்டுகோளாக வைக்கிறேன்” என்று கூறியுள்ளார். அரசு சார்பில் ஓடிடி தளம் தொடங்கப்பட்டால், அது நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கும் மற்றும் சிறிய பட்ஜெட் படங்களுக்கும் மிகப்பெரிய அளவில் வாழ்வாதாரமாகவும், மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்று அவர் தனது பேச்சில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பேசிய அவர், “திடீரென உருவான ஓடிடி மார்க்கெட் ஆரம்பத்துல அசுர வேகத்துல வளர்ந்தது, ஆனால் இப்போ எதிர்பாராத விதமாக ஓடிடி பிசினஸ் அப்படியே டவுன் ஆகிடுச்சு” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தற்பொழுது ஒட்டுமொத்த சினிமா பிசினஸும் மிகப்பெரிய குழப்பத்துல இருக்குன்னு சொல்லியிருக்காரு. அதுமட்டுமில்லாம, தியேட்டர் டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டதை குறிப்பிட்ட விஜய் சேதுபதி, தற்போதைய தயாரிப்பாளர்களின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தியேட்டர் டிக்கெட் கட்டணங்களை இன்னும் கொஞ்சம் உயர்த்த அரசு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் விஜய் சாருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இந்த கோரிக்கைகளுக்கு முதலமைச்சர் விஜய் தரப்பில் இருந்து என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இப்போதே கோலிவுட் வட்டாரமே ஆவலா எதிர்பார்க்கத் தொடங்கிட்டாங்க.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Concept graphic representing producer Yuvaraj Ganesan and Million Dollar Studios projects.

Ashok Selvan’s Next Release: ஒரு படத்துக்கு 500 கதைகள் வருது: மில்டன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ஓபன் டாக்!

Official musical update concept graphic for Karthik Subbaraj's film Dorothy.

Dorothy Update: இளையராஜா இசையில் அடுத்த அதிரடி: வருகிறது ‘ராஜா ட்ரான்ஸ்’!: கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ படத்திலிருந்து வெளியாகும் அடுத்த செம அப்டேட்!

Official release date announcement poster for Vijay Deverakonda's period action drama Ranabaali.

Ranabaali Update: அக்டோபர் 16-ல் வெளியாகும் விஜய் தேவரகொண்டாவின் ‘ரணபலி’: தசராவை குறிவைக்கும் பிரம்மாண்ட பான்-இந்தியா பீரியட் படம்!

Conceptual graphic representing director Ashwath Marimuthu's vision for Thalapathy Vijay's biopic.

Vijay’s Biopic: தளபதி விஜய்க்கு பயோபிக் எடுத்தால் என்ன தலைப்பு வைப்பேன்?: இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவின் சுவாரஸ்யமான சினிமா கனவு!

Concept graphic representing actor Ashok Selvan's rumored role in Nagarjuna's 100th film.

Nagarjuna x Ashokselvan: நாகார்ஜுனாவின் 100வது படத்தில் வில்லனாக அசோக் செல்வன்?: கோலிவுட்டில் தீயாய் பரவும் லேட்டஸ்ட் சினிமா தகவல்!

Concept graphic representing director Ashwath Marimuthu and Superstar Rajinikanth for the film Dharman.

Ashwath Praises Superstar: ரஜினி சார் மாதிரி ஒரு இனிமையான மனிதரைப் பார்த்ததில்லை!: ‘தர்மன்’ ஷூட்டிங் அனுபவம் குறித்து இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி!