இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20,004 ஆக அதிகரித்துள்ளது. 641 பேர் பலியாகி உள்ளனர். 3,901 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்றைய நிலவரபடி, கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1520இல் இருந்து 1596 ஆக அதிகரிப்பு. சென்னையில் ஒரேநாளில் 55பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் 4, தென்காசியில் 5 , தஞ்சை மற்றும் செங்கல்பட்டில் தலா 3 , கள்ளக்குறிச்சியில் 2 பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரானாவுக்கு பலி எண்ணிக்கை 18ஆக உயர்வு.
உலகம் முழுவதும் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 7,040 பேர் பலி. உலகம் முழுவதும் கொரோனாவால் 1,77,437 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டர்களின் எண்ணிக்கை 25,56,236 ஆதிகரிப்பு.







