கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள இந்த இரண்டாம் கட்ட ஊரடங்கின் போது எந்தெந்த சேவைகள் கிடைக்கும், எவை கிடைக்காது என்பதை பற்றி மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் 20-க்கு பிறகும் சில கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி மே 3 வரை கீழ்காணும் நிபந்தனைகளை மத்திய அரசு வலிறுத்தியுள்ளது.
1. பேருந்து, ரயில், விமான, ஆட்டோ, டாக்சி சேவைகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களும் இயங்காது
2. மாநிலங்களுக்கிடையே, மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து கிடையாது. மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.
3. அரசின் சிறப்பு அனுமதி பெற்றப்பட்ட நிறுவனங்களை தவிர்த்து, பிற தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்கக்கூடாது
4. மால்கள், தியேட்டர்கள், ஜிம், நீச்சல் குளம், கேளிக்கை பூங்கா, பார்கள், மண்டபங்கள் மூடப்பட்டு இருக்கும்
5. வழிபாடு தலங்கள் அனைத்திலும் பொதுமக்கள் கூட அனுமதியில்லை. விழாக்கள், நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் நடத்தக்கூடாது.
6. இறுதி சடங்கில் கலந்துகொள்ள 20 பேருக்கு மேல் அனுமதி கிடையாது.
ஏப்ரல் 20க்கு பிறகு என்ன சேவைகளை இயங்க மத்திய அரசு அனுமதித்துள்ளதை பார்ப்போம்:
1. அனைத்து வேளாண் நடவடிக்கைகள், மீன் பிடி தொழிகள், தபால் நிலையங்கள், பெட்ரோல் பங்க்குகள் செயல்படலாம்
2. 50% பணியாளர்களுடன் டீ, காபி, ரப்பர் தோட்டங்களில் பணிகளை செய்யலாம் மற்றும் பால் கொள்முதல், விற்பனை உள்ளிட்ட பணிகளை தொடரலாம்.
3. வங்கிகள் வழக்கமான நேரங்களில் சேவைகளை வழங்கலாம்,
4. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைனில் பாடம் நடத்தலாம்
5. நூறு நாள் வேலைத்திட்டங்களில் சமூக இடைவெளியுடன் பணிகளை தொடரலாம்
6. சாலை, ரயில், விமானங்கள் மூலம் அனைத்து சரக்கு போக்குவரத்தும் செயல்படும். ஆகிய கோரிக்கைகளை மத்திய அரசு மக்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளது.







