கொரொனா தொற்றில் இருந்து, இந்திய மக்களை காப்பாற்ற முன்னச்சிரிக்கையாக இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவை இந்திய அரசாகம் மே 3ஆம் தேதி வரை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கொரொனா குறித்த நடவடிக்கைகளை சிறப்பாக செயல்லாற்றியவர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இதனால் தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பிடமிருந்து வெகுவாக பாராட்டப்பட்டார்.
இதனை தொடர்ந்து, சிறிது நாட்களாக சுகாதாரத்துறை அமைச்சர் காணாமல் போக, அவரின் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்து வந்தார். இதனால் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்து பல்வேறு சர்ச்சை மிகுந்த கருத்துகள் வந்த வண்ணம் இருந்தது. இதற்கு மொத்தமாக இன்று செய்தியாளர் சந்திப்பின் போது விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
முன்னதாக, கொரொனா தொடர்ப்பான இன்றைய தகவல் அளித்த பின், நான் ஏன் செய்தியாளர்களை சந்திக்கவில்லை?! என்ற சர்ச்சைக்கு விளக்கமளித்துள்ளார். தான் பல மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியுள்ளதாகவும், வீடியோ கான்ஃபரன்சிங் செய்ய வேண்டியிருந்ததாகவும், அதனால்தான் முதல்வர் உத்தரவின் படி சுகாதாரத்துறைசெயலாளர் பீலா ராஜேஷ் கொரோனா குறித்த புள்ளி விவரங்களை வழங்கி வந்தார் என்றும், இந்த காரணங்கள் தவிர்த்து, வேறு எந்தவிதமான சந்தேங்களுக்கு செல்லவேண்டாம் – என்று அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கமளித்துள்ளார்.







