உலகம் முழுவதும் கொரோனாவால் 4,799,266 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,856,566 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், பல்வேறு நாடுகளை சேர்ந்த 316,519 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்தியாவில் 4ம் கட்டமாக ஊரடங்கு மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 536 பேருக்கு நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. நேற்றைய தினம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,224 இருந்த நிலையில், இன்றைய தினமான மே 18ஆம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:









