தமிழ் திரையுலகில் இளசுகளின் ஃபேவரெட் இயக்குநராக வலம் வரும் இலன், தனது தனித்துவமான ரொமான்டிக் கதைக்களங்கள் மூலம் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். ‘பியார் பிரேம காதல்’ மற்றும் ‘ஸ்டார்’ போன்ற வெற்றிகரமான படங்களைத் தொடர்ந்து, அவர் தற்போது இயக்கியுள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பியார் பிரேம கல்யாணம்’ (Pyaar Prema Kalyanam) என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகை சான்வி மேக்னா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் தியேட்டர் ரிலீஸைத் தாண்டி நேரடியாக பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்சில் (Netflix) வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி நேரடியாக நெட்ஃபிளிக்சில் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களைச் சென்றடையவுள்ளது. மேலும், படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் நாளை வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவாகியுள்ள இந்த ரொமான்டிக் டிரைலர் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.













