---Advertisement---

சைய்பர் க்ரைமை தொடர்ந்து இப்ப AI ஹேக்கிங்… மீண்டும் இணையும் ‘இரும்புத்திரை’ கூட்டணி!

Published on: November 10, 2026
Promotional portrait of actor Vishal for the techno-thriller film Irumbu Thirai 2.
---Advertisement---

தமிழ் சினிமாவில் கடந்த 2018-ஆம் ஆண்டு அறிமுக இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், விஷால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘இரும்புத்திரை’. சைய்பர் க்ரைம் (Cyber Crime), டிஜிட்டல் பணத் திருட்டு மற்றும் தனிநபர் தரவுத் திருட்டு ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம் தியேட்டர்களில் வசூல் சாதனை படைத்தோடு விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் 2-வது பாகம் (‘Irumbu Thirai 2’) குறித்த மிகவும் சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இயக்குநர் பி.எஸ். மித்ரன் மற்றும் நடிகர் விஷால் மீண்டும் இணையும் இப் புதிய பாகத்திற்கான முதற்கட்ட திரைக்கதை அமைக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. இத்திரைப்படம் 2027-ஆம் ஆண்டில் படப்பிடிப்புக்குச் செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல் பாகத்தில் டிஜிட்டல் வங்கி மோசடிகள் மையமாக இருந்த நிலையில், ‘இரும்புத்திரை 2’ திரைப்படத்தின் கதைக் களம் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில் நுட்பத்தின் ஆபத்துகளைச் சுற்றி அமைக்கப்படவுள்ளது. ஏஐ அமைப்புகள் தங்களுக்குள் ஹேக் செய்து கொள்ளும் ஆபத்துகள் மற்றும் மனிதக் கட்டுப்பாட்டை மீறும் தொழில்நுட்ப சிக்கல்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த நவீன தொழில்நுட்ப த்ரில்லர் பற்றிய அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actors Suriya and Mahesh Babu smiling during a major South Indian cinema event.

“எங்கள் குழு சார்பாக மனமார்ந்த நன்றிகள்!”… ‘சீன்’ படத்திற்கு மகேஷ் பாபு கொடுத்த பாராட்டு… சூர்யா ரியாக்‌ஷன்!

Actor Vijay Antony along with director Ananda Krishnan for the movie Pichaikkaran 3.

‘பிச்சைக்காரன் 3’ மெகா அறிவிப்பு! ‘மெட்ரோ’ பட இயக்குநருடன் இணையும் விஜய் ஆண்டனி!

Suriya in a rugged cinematic look with a coastal sea backdrop.

கடலோர மக்களின் வாழ்க்கை பின்னணியில் சூர்யா… தாணு தயாரிப்பில் ‘படகோட்டி’ ரீமேக் தலைப்பா?

Actor Kamal Haasan looking thoughtful during a cinematic media event.

30 லட்சத்தில் உருவான படம்… 3 கோடி கொடுத்து நெகட்டிவ் உரிமையை மீட்ட உலகநாயகன்! கமல்ஹாசனின் மாஸ் செயல்!

Promotional portrait of actor Vijay Sethupathi highlighting his upcoming movie releases.

டிசம்பர் முதல் கோடைக்காலம் வரை… தியேட்டர்களை ஆக்கிரமிக்கும் விஜய் சேதுபதி! வெளியான மெகா அப்டேட்!

Actor and Andhra Pradesh Deputy Chief Minister Pawan Kalyan with Anna Lezhneva.

“பரஸ்பர மரியாதையுடன் பிரிகிறோம்…” ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் – அன்னா லெஷ்னேவா விவாகரத்து அறிவிப்பு!