---Advertisement---

திரையரங்குகளில் ரிலீஸாகும் சியான் விக்ரமின் ‘மகான் 2’: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிரடி அறிவிப்பு!

By Sri
Published on: September 30, 2026
Mahaan 2 movie theatrical release announcement poster.
---Advertisement---

தமிழ் சினிமாவின் ஆற்றல்மிக்க கூட்டணியான சியான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில், திறமையான இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ‘மகான்’ (Mahaan) திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

தந்தை மற்றும் மகனின் கேங்ஸ்டர் மோதல்களை மையமாகக் கொண்டு உருவான இப்படம் விமர்சன ரீதியாகப் பாராட்டுக்களைப் பெற்றாலும், தியேட்டர்களில் வெளியாக வேண்டிய இத்திரைப்படம் தவிர்க்க முடியாத காரணங்களால் ஓடிடி (AMAZON) தளத்தில் வெளியானது. இது படக்குழுவினரையும், குறிப்பாக முன்னணி நடிகர்களான சியான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகியோரையும் மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தற்போது ‘மகான் 2’ (Mahaan 2) குறித்த அதிரடியான தகவலை வெளியிட்டுள்ளார். முதல் பாகத்தின் போது தியேட்டர் அனுபவத்தைத் தவறவிட்ட ஆதங்கத்தைப் போக்கும் வகையில், இரண்டாம் பாகத்தை முழுமையாக ஒரு தியேட்டர் திரைப்படமாக உருவாக்கி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளர். முதல் பாகத்தின் இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளுக்குத் தியேட்டர்களில் கிடைக்க வேண்டிய மாபெரும் வரவேற்பை, இந்த முறை ‘மகான் 2’ மூலம் ரசிகர்களுக்குப் பெற்றுத் தருவோம் என்று படக்குழுவினர் உறுதியளித்துள்ளனர்.

தந்தை – மகன் காம்பினேஷனின் இந்த மிரட்டலான இரண்டாம் பாகம் கோலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க