தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண், தனது 3-வது மனைவி அன்னா லெஷ்னேவாவுடன் (அன்னா கொனிடேலா) 13 ஆண்டுகள் நீடித்த திருமண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவந்து, அதிகாரப்பூர்வமாகப் பிரிவதாக அறிவித்துள்ளார். இந்தத் தகவல் இந்திய திரையுலகிலும் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், பரஸ்பர சம்மதம் மற்றும் மரியாதையுடன் பிரிவதாகவும், அதேநேரத்தில் தங்களின் குழந்தைகளின் நலனில் தொடர்ந்து அக்கறையுள்ள பெற்றோராகவே இருப்போம் என்றும் தெரிவித்துள்ளனர். பவன் கல்யாணின் திருமண வரலாற்றில், 1997-ஆம் ஆண்டு நந்தினி என்பவரை முதலாவதாகத் திருமணம் செய்தார். இந்தத் திருமணம் 2008-ல் விவாகரத்தில் முடிவடைந்தது.
SHOCKING…!
#PawanKalyan and #AnnaKonidala have parted ways and officially divorced. https://t.co/18Qyd4Vks4
— Rangasthalam (@RangasthalamIN) November 9, 2026
அதன்பின், 2009-ல் நடிகை ரேணு தேசாயைத் திருமணம் செய்த பவன் கல்யாண், 2012-ல் அவரை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தொடர்ந்து, 2013-ஆம் ஆண்டு ரஷ்ய நடிகையான அன்னா லெஷ்னேவாவை 3-வதாகத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது இந்த 3-வது திருமணமும் முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.













