---Advertisement---

இனிமேல் அம்மா உணவகங்களில் இலவச உணவு! சென்னை மாநகராட்சியின் அதிரடி அறிவிப்பு!!

By Sri
Published on: April 24, 2020
Chennai Amma Unavagam
---Advertisement---

ஊரடங்கு உத்தரவால் அரசாங்கம் முதல் அடித்தட்டு மக்கள் வரை பல்வேறு சரிவுகளை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் தொழில் நிறுவனங்கள் பல மூடப்பட்டுள்ளதால் தினக்கூலி தொழிலாளர்கள் உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர்.

இதனை அடுத்து, சேலத்திலும் திருவாரூர் மாவட்டங்களிலும் அம்மா உணவகங்களில் இருவேளை உணவு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து சென்னையிலும் சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னை முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் ஊரடங்கு முடியும் வரை உணவு இலவசம் என அறிவிப்பு.

அதன்படி, தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால் அன்றாட பிழைப்பை நம்பி வாழும் மக்கள் உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர். ஆதலால், இனிமேல் ஊரடங்கு முடியும் வரை சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் இலவச உணவு வழங்கப்படும் என்றும் உணவு உண்ண வருபவர்கள் தங்கள் விவரங்களை தெரிவித்துவிட்டு இலவசமாக உணவு உண்ணலாம் என்று சென்னை மாநகராட்சி அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.