---Advertisement---

உங்ககிட்ட ரேஷன் கார்டு இல்லையானாலும் பரவாயில்லை! மகிழ்ச்சியான செய்தி!!

By Sri
Published on: April 24, 2020
non-ration card people
---Advertisement---

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால், மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். இதனை அடுத்து, மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்க தமிழக அரசு மும்முரம் காட்டி வருகிறது.

அதனை தொடர்ந்து, அரசு தரப்பு ஏற்கனவே குறைந்த விலையில் ரேஷன் கடைகளில் 19 வகை மளிகைப் பொருட்களை ரூ. 500-க்கு வழங்க திட்டமிட்டிருந்தது. இதனனிடையே ரேஷன் கார்டு இல்லாதவர்கள், அத்தியாவசிய பொருட்களுக்கு என்ன செய்ய முடியும்? என்று பலதரப்பட்ட மக்களின் மனதில் கேள்விக்குறியாக எழுந்தது.

500rs provisional list
500rs provisional list

இந்நிலையில் உங்ககிட்ட ரேஷன் கார்டு இல்லையானாலும் பரவாயில்லை, என்று தமிழக அரசு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரூ.500 மதிப்புள்ள 19 வகையான மளிகை பொருள்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக செய்தி வெளியிட்டுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.