---Advertisement---

இந்த நிபந்தனைகள் ஹாட்ஸ்பாட் பகுதிகளுக்கு பொருந்தாது! மத்திய அமைச்சரின் ட்விட்டர் பதிவு!!

By Sri
Published on: April 19, 2020
After april 20th
---Advertisement---

இந்தியாவில் 144 தடை உத்தரவை இந்திய அரசு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதை அடுத்து ஏப்ரல் 20 பிறகு சில நிபந்தனைகளுடன் செயல்படும் தொழில்களின் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து நாளை ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் என்னென்ன சேவைகள் கிடைக்கும்?? என்பதை மத்திய அமைச்சர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, நாளை 20ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும் சேவைகள், தொழில்களின் பட்டியலை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-

ஆயுஷ் உள்பட அனைத்து மருத்துவ சேவைகள் செயல்படும்;
வேளாண், மீன்பிடித் தொழில், தோட்டத் தொழில்களுக்கு அனுமதி;
தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டத் தொழில்கள் 50 சதவீத ஊழியர்களுடன் கொண்டு செயல்பட வேண்டும்;
நிதித்துறை மற்றும் சமூக நலத்துறை செயல்படும்;
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து பணியாற்ற வேண்டும்;
பொது வினியோகத்துறை, அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செயல்படும்;
மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி;
ஆன்லைன் மூலம் கற்பித்தல், தொலைதூர கல்விக்கு அனுமதி;
வர்த்தகம், தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம்;
தனியார் வாகனங்களை மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்காக இயக்கலாம்;
அனைத்து மத்திய, மாநில, யூனியன் பிரதேச அலுவலகங்கள் செயல்படும்;
கட்டிட தொழில்களை தொடர அனுமதி;

இந்த அறிவிப்புகள், கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள பகுதிகளுக்கு (ஹாட்ஸ்பாட்) பொருந்தாது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.