தமிழகத்தில் கொரொனா நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அது தீவிரமடைந்து வருவதால், தமிழக சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே மருத்துவத்துறையில் மருத்துவர்கள், செவிலியர்கள் என மருத்துவ துறையின் கட்டுப்பாட்டுக்குள் வரும் பணிகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து 12ஆம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கும் தற்காலிகமாக சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி 12ஆம் வகுப்பில் உயிரியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பிரிவுகளில் பயின்ற மாணவர்களுக்கு மட்டும் குறிப்பாக ஆண்கள் மட்டுமே தற்காலிகமாக சுகாதார மேற்பார்வையாளர் நியமிக்கப்படுகிறார்கள். பல்துறை சுகாதார பணியாளர்களாக நியமிக்கப்படும் மேற்பார்வையாளர்களுக்கு மூன்று மாதத்திற்கு மாதந்தோறும் 20 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என்றும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதோ உங்கள் பார்வைக்கு:










