---Advertisement---

நாளை திறக்கிறது டாஸ்மாக் கடைகள்! கொஞ்சம் இதைப் படித்துவிட்டு செல்லுங்கள்!

By Sri
Published on: May 6, 2020
tasmac
---Advertisement---

நாளை டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் திறக்கப்பட உள்ள நிலையில் வாட்ஸ் ஆப்பில் ஒரு பதிவு வைரலாக பரவி வருகிறது.

தமிழகத்தில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கினால் செயல்படாமல் இருந்த மதுக்கடைகள் நாளை முதல் இயங்க உள்ளன. பல இடங்களில் டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை நீடிக்க போலீஸார் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எவ்வளவுதான் பாதுகாப்புகளை நீட்டித்தாலும் இந்த நேரத்தில் டாஸ்மாக்கை திறப்பது அபாயகரமானது என பொதுமக்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நாளை ஏன் டாஸ்மாக் சென்று சரக்கு வாங்கக் கூடாது என்பதற்கு சில பல காரணங்களை பட்டியலிட்டு வாட்ஸ் ஆப்பில் ஒரு பதிவு வேகமாகப் பரவி வருகிறது.

அந்த பதிவு:-

  • தயவு செய்து நாளை டாஸ்மாக் செல்ல வேண்டாம்.
  • ஒருவேளை நீங்கள் மது வாங்க நாளை டாஸ்மாக் செல்லும் நபராக இருந்தால் இதை படிக்கவும்.
  • நீங்கள் மது வாங்க டாஸ்மாக் செல்வீர்கள்
  • கூட்டத்தில் உங்களுடன் தொடர்பில் இருந்த யாருக்கோ கொரோனா பாசிட்டிவ் வருகிறது என வைத்துக்கொள்வோம்.
  • அரசு உடனடியாக அவருடன் டாஸ்மாக்கில் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிய முற்படும்.
  • தாமாகவே தொடர்பிலிருந்தவர்கள் முன்வர வேண்டுமென அழைப்பார்கள். ஒருவேளை நீங்கள் முன்வரவில்லை என்றால் CCTV கேமரா, டிராபிக் சிக்னல் கேமரா மூலம் உங்கள் வீடுதேடி வருவார்கள்.
  • நீங்கள் 108 ஆம்புலன்ஸில் ஏற்றப்படுவதை உங்களுக்கு ஆகாத பக்கத்துவீட்டுக்காரன் வீடியோ எடுத்து வாட்சாப்பில் பரவ விடுவான்.
  • உங்களுடன் தொடர்பில் இருந்த மனைவி, குழந்தைகள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
  • உங்களுக்கு பரிசோதனை முடிவுகள் வர ஒரு வாரம் கூட ஆகலாம். நெகட்டிவ் என்றும் வரலாம்.
  • ஆனால் அதற்குள் நீங்கள் வசிக்கும் பகுதி வேலியால் அடைக்கப்படும். அனைவரும் ஏசுவார்கள். உங்கள் வீட்டில் நோட்டிஸ் ஒட்டப்படும். வில்லனாக நீங்கள் சித்தரிக்கப்படுவீர்கள்.
  • நீங்கள் கொரோனா பாதித்தவர் இல்லை என்றாலும், மக்கள் தவறாக உங்கள் மீது விஷமத்தை பரப்புவார்கள். நீங்களும் உங்கள் குடும்பத்தை சார்ந்தவர்களும் சமூகத்தால் நிராகரிக்கப் படுவீர்கள். வெறுமை உங்களை சூழ்ந்து கொள்ளும். மனஅமைதி எட்டக்கனியாய் மாறிவிடும்.
  • நான் மிகைப்படுத்தி கூறுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், கொரோனா பாதித்து இறந்த மருத்துவரின் உடலை புதைக்க இடம் கூட தராமல் மறுத்த அவலம் நிகழ்ந்து இந்த சமூகத்தில் தான் என்பதை அறிவோம்.
  • குடிப்பது மிகக்கொடிய செயல் என்றெல்லாம் நான் ஒருபோதும் கூறப்போவதில்லை. ஆனால், குடிப்பதற்கான நேரம் இது அல்ல. பாதுகாப்பான சூழலும் இது அல்ல.
  • வீட்டிலேயே இருங்கள். நேரம் கை கூடி வரும்போது நீங்கள் விரும்பியதை செய்து கொள்ளுங்கள்.
  • தயவுசெய்து யோசித்து பாருங்கள்.
    மனிதன் மிகக்கொடிய மிருகம். அந்த மிருகத்தின் சுயநலத்திற்க்காக இரையாகி விடாதீர்கள்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial image representing director Venkat Prabhu.

சிவகார்த்திகேயன் பட சர்ச்சை குறித்து மனம் திறந்த இயக்குநர் வெங்கட் பிரபு: முழு விவரம்!

Director Karthik Subbaraj speaking at the Dorothy movie press meet.

“ட்விட்டர் உலகம் ரொம்ப சிறியது!” – ‘டோரதி’ பட விமர்சனங்கள் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிரடிப் பேச்சு!

Romantic portrait of VJ Ezhilarasi and actor Dinesh.

“லுப்பர் பந்து” புகழ் நடிகர் தினேசுடன் காதலில் உள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்திய விஜே எழிலரசி: வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

Editorial image representing Gangai Amaran and Venkat Prabhu.

“அவனை இக்னோர் பண்ணிடுங்க!” – இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு கங்கை அமரன் கொடுத்த அதிரடி அறிவுரை!

Silambarasan and Vetri Maaran film set atmosphere.

வெற்றிமாறன் மீது சிம்புவுக்குக் கோபமா? ‘அரசன்’ பட விவகாரத்தால் கோலிவுட்டில் வெடிக்கும் புதிய சர்ச்சை!

Gladiators movie trailer breaking records in theatres.

தியேட்டர்களில் வெளியான அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ டிரெய்லர்: வசூலில் புதிய சாதனை!