நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான். இவர் கடந்த தேர்தலின்போது திமுகவையும் அதன் தலைவர் முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக எதிர்மறை விமர்சனங்கள் கொண்டு பேசினார்.
இந்த நிலையில் சீமானின் தந்தை சமீபத்தில் மறைந்தபோது திமுக தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்தார்.
இந்நிலையில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை பல நாட்களுக்கு மரியாதை நிமித்தமாக சந்தித்த சீமான், கொரோனா நிவாரணத்திற்கு 5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.







