கடந்த வருடம் 2020 மார்ச் மாதம் துவங்கிய கொரோனா அலை பல்வேறு பிரச்சினைகளை மக்களுக்கு கொடுத்தது. பல பிரச்சினைகள் உள்ள மக்கள் நிம்மதியாய் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தார்கள். அதையும் கெடுப்பது போல கோவில்களையும் அடைக்க வைத்து இம்சை செய்தது கொரோனா தொற்று.
புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் கூட அடைக்கப்பட்டது. பின்பு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது அங்கே கூட்டம் கூடி விடாதபடி நாள் தோறும் லட்சக்கணக்கில் மக்கள் செல்கின்ற காரணத்தால் இலவச தரிசனத்தை ரத்து செய்தது.
ஒரு வருடமாக திருப்பதி செல்லும் பக்தர்கள் கட்டண தரிசனத்தில் தான் சென்று வருகின்றனர்.
ஒரு வருடத்துக்கு பிறகு இலவச தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள்ளூர் பக்தர்கள் 2,000 பேருக்கு இலவச தரிசனத்துக்கு தேவஸ்தானம் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.













