---Advertisement---

IPL 2019: ராஜஸ்தான் மீண்டும் தோல்வி! பஞ்சாப் அணி வெற்றி!!

By Sri
Published on: April 17, 2019
Kings XI Punjab v Rajasthan Royals
---Advertisement---

IPL 2019ல், நேற்று இரவு மொஹாலியில் நடந்த போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற ரஹானே பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியின் கெய்ல் 2 பவுன்டரி மற்றும் 3 சிக்ஸர் அடித்து 22 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்த போது ஆர்சர் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். மயங்க் அகர்வால் 26 ரன்களில் வெளியேற, ராகுல் மற்றும் மில்லர் ஜோடி சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ராகுல் 52 (47), மில்லர் 40 (27) எடுத்து வெளியேறினர். அடுத்து வந்த எவரும் நிலைக்கவில்லை. கடைசி ஓவரில் களமிறங்கிய அஷ்வின் 2 சிக்ஸ் மற்றும் 1 பவுன்டரி விளாசி முடித்து வைத்தார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 182/6 ரன்கள் குவித்தது.

அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில், ஓப்பனிங்கில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. ரஹானேவுக்கு பதிலாக திரிப்பாதி ஓப்பனிங் செய்தார். திரிப்பாதி 50, ஜாஸ் பட்லர் 23, சாம்சன் 27, ரஹானே 26, பின்னி 33 என எடுக்க, ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 170 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

இதனால், பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 5 வது வெற்றியை பதிவு செய்தது.
இதனால் புள்ளி பட்டியலில் பஞ்சாப் அணி 4வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

Sri