Published
10 months agoon
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் அடிக்கடி மரணமடைவது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்புதான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே காலமானார்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரு சைமண்ட்ஸ் காலமாகி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
46வயதான ஆண்ட்ரு சைமண்ட்ஸை பார்த்தால் ஆஸ்திரேலியாவுடன் மோதும் எதிர் தரப்பு நாட்டு ரசிகர்களுக்கு ஒரு கிலி இருக்கும். ஏனென்றால் சைமண்ட்ஸ் களத்தில் இறங்கினால் அவ்வளவு சீக்கிரம் போக மாட்டார். பந்துகளை துவம்சம் செய்து விடுவார். தோல்வி நிலையில் இருக்கும் அணியை கூட பட்டென மீட்டு விடுவார் இவர்.
இவர் எப்படா அவுட் ஆவார் என்றே எதிர் தரப்பு அணியின் ரசிகர்கள் இருப்பார்கள். இந்தியா ஆஸ்திரேலியாவுடனான கிரிக்கெட்டில் சைமன்ட்ஸ் இறங்கிவிட்டாலே அவ்வளவுதான் இந்திய ரசிகர்களுக்கு இவர் எப்படா போவார் என்றாகிவிடும். கடந்த 2008ல் நடந்த கிரிக்கெட் போட்டியின்போது இந்திய வீரர் ஹர்பஜன் சிங் இவரை குரங்கு என திட்டினார் என சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
46 வயதான இவர் ஓய்வு பெற்றுவிட்டார். நேற்று ஆஸ்திரேலியாவில் நடந்த கார் விபத்தில் மரணமடைந்துவிட்டார்.