இந்திய கிரிக்கெட் அணியில் பேட்ஸ்மேனாக இருந்தவர் நவ்ஜோத் சிங் சித்து. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்.சிறந்த முறையில் இந்திய கிரிக்கெட் அணிக்காக பல போட்டிகளை விளையாடிவர்.
ஆரம்பத்தில் பாஜகவில் இவர் இருந்து வந்தார். ஆனால் கடந்த பல வருடங்களாக காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராகவும் மாநில அமைச்சராகவும் சித்து இருந்திருக்கிறார்.
சித்துவின் கார் பாட்டியாலாவில் கடந்த 1988ம் ஆண்டு விபத்தில் சிக்கியது. அப்போது தனது வாகனம் மீது மோதிய நபர்களுடன் சண்டையிட்டு ஒரு கட்டத்தில் முதியவர் ஒருவரை தாக்கினார்.
குர்ணம் சிங் என்ற அந்த முதியவர் சித்து தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் சித்து மீது வழக்கு பதியப்பட்டது. முதலில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
பின்பு பஞ்சாப்-ஹரியானா நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்தபோது, அதனை எதிர்த்து சித்து மேல்முறையீடு செய்தார்.
இந்த நிலையில் அவரது மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது அத்துடன் உச்ச நீதிமன்றம் தற்போது அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது பஞ்சாப் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.