இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்

25

இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். பல்வேறு ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டி, ஐபிஎல் போட்டி என பல போட்டிகளில் விளையாடி சாதனை படைத்துள்ளார்.

சமீபத்தில் இவரின் வாழ்க்கை வரலாற்றை படம் எடுக்க நினைக்கையில் சினிமாவில் பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அந்த படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

பல சர்ச்சைகளுக்கும் சொந்தக்காரர் இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடருக்காக சென்னையில் இருந்த அவர் நேற்று திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காக  சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்து கொள்வதற்காக மருத்துவமனையில் முத்தையா முரளிதரன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாருங்க:  ஏப்ரல் 12 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்
Previous articleவாட்ஸப் யூஸ் செய்பவர்களா கொஞ்சம் உஷாரா இருங்க
Next articleமுதல்வர் எடப்பாடி ஆஸ்பத்திரியில் அனுமதி